கவலைய விடுங்க.. 90 நாட்கள் வேலிடிட்டி.. 200ஜிபி டேட்டா.. OTT.. அள்ளி கொடுக்கும் Jio.. எந்த திட்டம்?
வரும் டிசம்பர் மாதம் ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோபோன் ஐடியா (vi) ஆகிய நிறுவனங்கள் 10 முதல் 12 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக நாட்டில் 5G பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு முடிவை டெலிகாம் நிறுவனங்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுவும் அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே இப்போது அதிக வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ 90 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் இரண்டு பட்ஜெட் விலை திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் வழங்கப்படும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த ஜியோ திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








