Home
News

ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? 56 நாட்கள் வேலிடிட்டி.. OTT சந்தா.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..

ஏர்டெல் நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ. அதுவும் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக சலுகைகள் வழங்குகிறது ஜியோ நிறுவனம். எனவே தான் இந்நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? 56 நாட்கள் வேலிடிட்டி.. OTT சந்தா..

ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 579 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.579 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

மூன்று மாதங்களுக்கு 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் கிடைக்கும். இதுதவிர ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் இதில் வழங்கப்படும்.

56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தேவைப்படும் பயனர்கள் ஜியோவின் ரூ.579 மற்றும் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம். ஒரு வேளை 98 நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என்றால் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோ சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? 56 நாட்கள் வேலிடிட்டி.. OTT சந்தா..

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

மேலும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans offer 56 days validity and unlimited benefits: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X