ஜியோவின் வேற லெவல் திட்டங்கள்.. பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கு வகையில் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு அசத்தலான புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 219 Recharge Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரா 2ஜிபி டேட்டா கிடைக்கும் எனவே இந்த ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும்.
வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 399 Recharge Plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் எக்ஸ்ட்ரா 6ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே இந்த ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 90ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 999 Recharge Plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் எனவே இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ((Jio Rs 1499 Recharge Plan) தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








