ஒரே Jio ரீசார்ஜ்.. 3 மாதங்களுக்கு கவலை இருக்காது.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்?
ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தி அதிரவைத்தது. குறிப்பாக கம்மி விலையில் கிடைத்த மூன்று மாத வேலிடிட்டி தரும் திட்டங்கள் கூட தற்போது சற்று உயர்வான விலையில் தான் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதேபோல் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சமீபத்தில் உயர்த்தியது.
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. சமீபத்தில் கூட மலிவு விலையில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 45 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது. சரி இப்போது விஷயத்துக்கு வரும் ஜியோ நிறுவனம் 3 மாதங்கள் வேலிடிட்டி தரும் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 999 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid recharge plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை. குறிப்பாக இந்த திட்டமும் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதுதவிர 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது.குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக ஜியோ ரூ.999 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 3 மாத வேலிடிட்டி நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதாவது ஒரு மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வதை விட பட்ஜெட் விலையில் இதுபோன்ற மூன்று மாதம் வேலிடிட்டி தரும் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது.
மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குவதுடன் விரைவில் 4ஜி சேவையும் வழங்க உள்ளது. தற்போது நாட்டில் முக்கிய இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்கி உள்ளது. விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








