ஜியோ தரும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. இந்த இரண்டு திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..
ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்களை மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். அதேபோல் ஜியோ (Jio) நிறுவனம் சமீபத்தில் கூட 5.5ஜி என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் அதிவேக இணையத்தைப் பெறமுடியும்.
ஆனாலும் இந்த 5.5ஜி தொழில்நுட்பம் ஆனது சில ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. கூடிய விரைவில் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த தொழில்நுட்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் இன்னும் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.
அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை கவனத்தில் கொள்க.
ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.
குறிப்பாக ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும்.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக டேட்டா இந்த திட்டங்கள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








