தலைவன் எப்போவுமே கிரேட்.. ரூ.459 முதல்.. எக்ஸ்ட்ரா டேட்டா.. அள்ளி கொடுக்கும் அம்பானி.. இதோ பட்டியல்..
ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஜியோ (Jio)நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா (எக்ஸ்ட்ரா டேட்டா) சலுகைகளை இப்போதும் வழங்கி வருகிறது. தற்போது இதுபோன்ற திட்டங்களுக்குத் தான் அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது ஜியோவின் கூடுதல் டேட்டா சலுகை வழங்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 459 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த ஜியோ திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்கும். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது.
ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா ஜியோ ரூ.459 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதனுடன் Nano Banana அம்சத்தையும் பயன்படுத்த முடியும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 545 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. எனவே ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் கிளவுட் கேமிங் சலுகையில் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்களை (High Definition Premium Games) அணுக முடியும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த ஜியோ திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை, ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா, ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பேன்கோட் (FanCode) சந்தா, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற பல சலுகைகள் இந்த ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.
ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications