மினிமம் ரீசார்ஜ்.. 2025-க்கு இது புதுசு.. ரூ.189 எடுங்க.. ரூ.250-க்குள் 6 திட்டங்கள்.. இதுக்கு மேல கம்மி இல்ல!
ஜியோ நிறுவனத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமே அடங்கிய திட்டங்கள் வந்த பிறகு மூன்று திட்டங்கள் நீக்கப்பட்டன. பிறகு ஒரு திட்டம் சேர்க்கப்பட்டது. ஆகவே, இப்போது சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க எவ்வளவு ரீசார்ஜ் செய்ய வேண்டும்? அடிமட்ட விலைக்கு எத்தனை திட்டங்கள் கிடைக்கின்றன? ரூ.250-க்குள் கிடைக்கும் திட்டங்கள் எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வாய்ஸ் கால்கள் மட்டும் கொண்ட திட்டங்கள் மலிவாக கிடைக்கும் என்று கஸ்டமர்கள் எதிர்பார்த்த நேரத்தில், கூடுதல் வேலிடிட்டியுடன் ஆரம்ப விலையே ரூ.448ஆக தொடங்குகிறது. ஆகவே, டேட்டா கொண்ட திட்டங்களே பரவாயில்லை போல என்று கஸ்டமர்கள் நினைக்கின்றனர். இவர்களுக்கு ரூ.189 முதல் ரூ.249 வரையில் கிடைக்கும் திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

ஜியோ ரூ 189 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 189 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் வேல்யூ சலுகையின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு வெறும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இருப்பினும், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ 198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களின் சலுகைகளை பெற்று கொள்ளலாம். கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. ஆகவே, வேலிடிட்டி வெறும் 14 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஜியோ ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 199 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. மேலும், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜியோ ரூ 209 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 209 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் 22 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. தினசரிக்கு 1 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, 22 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்யலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா சலுகைகள் வருகிறது.
ஜியோ ரூ 239 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 239 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கின்றன. ஆகவே, தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆப்களை பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ 249 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 249 Prpaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். சொல்லப்போனால், மாதாந்திர வேலிடிட்டியில் கிடைக்கும் மலிவான திட்டம் இதுவாகும். நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை இந்த திட்டம் கொடுக்கிறது. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடையாது.
இருப்பினும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆப்களை பயன்படுத்தலாம். ரூ.250 விலைக்குள் நீங்கள் விரும்பும் சலுகைக்கு ஏற்றவாறு இதில் ஏதாவது ஒரு திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். வாய்ஸ் கால் மட்டுமே விரும்பினால், 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ரூ.448 மதிப்பிலான திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.


Click it and Unblock the Notifications