ஒரே Jio ரீசார்ஜ்.. ஹாட்ஸ்டார்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்? என்ன விலை?
ஜியோ (jio) நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியது. அதன்பின்பு சில முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களையும் நீக்கியது. அதாவது பட்ஜெட் விலையில் ஓடிடி நன்மைகளை வழங்கி ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கி அதிர வைத்தது ஜியோ நிறுவனம். முன்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா தரும் நிறையத் திட்டங்களை வழங்கி வந்தது ஜியோ நிறுவனம்.
ஆனால் தற்போது ஒரு சில திட்டங்களை மட்டும் தான் வைத்துள்ளது ஜியோ நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக டேட்டா நன்மையும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டத்தை இந்த பதிவில் சற்று விரவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid recharge plan) தான் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது.
இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைகிறது. தற்போது இந்த திட்டம் மட்டுமே டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நன்மையை வழங்குகிறது. ஒருவேளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வேண்டாம் நெட்பிளிக்ஸ் சந்தா வேண்டும் என நினைக்கும் பயனர்களுக்கு இரண்டு திட்டங்கள் உள்ளன. அந்த திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid recharge plan) ஆனது நெட்பிளிக்ஸ் (மொபைல்) சந்தா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் தி திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.
குறிப்பாக ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid recharge plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தா வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ திட்டம்.
ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








