மறுபடியும் ரூ.300-க்கு ரெடியா இருங்க.. 2025-க்கு Jio சிம் கார்டுக்கு இதுதான் ரீசார்ஜ் திட்டம்.. 1.5GB டேட்டா!
2024ஆம் ஆண்டில் ஜியோ (Jio) நிறுவனத்தின் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்ந்தன. இதனால், 2025ஆம் ஆம் ஆண்டிலும் கட்டணங்கள் உயருமா என்னும் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, கட்டண உயர்வை காரணம்காட்டி பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இப்போது, ரூ.300 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid Plan) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிம் கார்டு ஆக்டிவ் திட்டங்களுக்கு மட்டுமே அதிக ரீசார்ஜ் மவுசு இருக்கிறது. ஏனென்றால், 56 நாட்கள், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களைவிட 28 நாட்கள் அல்லது அதைவிட கம்மியான வேலிடிட்டி கொண்ட திட்டங்களையே கஸ்டமர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்கின்றனர். அதிக காசும் தேவைப்படாமல், குறைந்த வேலிடிட்டியுடன் கிடைத்தால்கூட போதும் என்று இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட கஸ்டமர்களுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் ரூ.300-க்கும் கீழ் மூன்று திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. இதில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரூ 199 (Jio Prepaid Plan Rs 199), ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரூ 239 (Jio Prepaid Plan Rs 239), ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ரூ 299 (Jio Prepaid Plan Rs 299) தவிரக்க முடியாததாக இருக்கிறது. இவை அடுத்தாண்டு விலை உயர்வு செய்யப்படுமா என்றால் கிடையாது.
அப்படியே நீடிக்க இருக்கிறது. ஆகவே, அந்த திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 1.5 ஜிபி டேட்டாவில் தொடங்கும் முதல் திட்டம் இதுவாகும். இதற்கு கம்மியான விலையில் 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டம் இல்லை. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா பெற முடிகிறது.
இந்த 1.5 ஜிபி டேட்டாவை அன்றைய நாள் முடிவதற்குள் முழுவதும் பயன்படுத்தினாலும், ஜியோவில் வழக்கமாக கிடைக்கும் 64 கேபிபிஎஸ் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பெற்று கொள்ளலாம். ஆகவே, 27 ஜிபி மொத்த டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவை போல 100 எஸ்எம்எஸ்கள் நாள்தோறும் அனுப்பி கொள்ள கிடைக்கிறது.
இந்த 18 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி வாய்ஸ் கால்கள் (STD Voice Calls) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெறலாம். மேலும், ஜியோ கிளவுட் ஆப் பயன்படுத்த கிடைக்கிறது. அதோடு ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதற்கு அடுத்ததாக ஜியோ ரூ.239 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் 22 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 22 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டா தினமும் கிடைக்கும். ஆகவே, மொத்தமாக 33 ஜிபி டேட்டாவும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் பயன்படுத்த கிடைக்கிறது. எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் மற்றும் ஜியோ ஆப் சலுகைகளானது, முந்தைய திட்டத்தை போலவே இருக்கின்றன.
ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் (நாள்தோறும்) ஆகியவற்றை ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆப்களுடன் பெற்று கொள்ளலாம். இறுதியாக ரூ.300-க்கும் கீழ் கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா திட்டத்தில் கடைசியாக ரூ.299 திட்டம் கிடைக்கிறது. 1.5 ஜிபி டேட்டா ஆனது 28 நாட்கள் வேலிடிட்டியில் பயன்படுத்த கிடைக்கிறது.
இந்த 28 நாட்கள் முழுவதும் தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டி வருவதால், 42 ஜிபி டேட்டாவையும், தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் டேட்டாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கும் ஜியோ நிறுவனத்தின் மூன்று ஆப்களின் சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








