வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

|

நேரம் பொன்னானது, இந்த அவசர மயமான வாழ்க்கை ஓட்டத்தில், நாம் நிதானமாக நின்று பேசுவதற்குக் கூட போதிய நேரம் இல்லாமல் நமது வாழ்க்கை முறையைப் பரபரப்பாக ஓட்டிக்கொண்டிருக்கிறோம். காலையில் எழுந்து அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்புவது, மீண்டும் இரவு டிராபிக் நெருக்கடியில் வீடு வந்து சேர்வது என்று நம் வாழ்க்கை மிகவும் வேகமாக ஒரே சுழற்சியில் டென்ஷனாக சுழன்றுகொண்டிருக்கிறது. இந்த டென்ஷனை குறைக்க Jio ஒரு சூப்பர் திட்டத்தை வழங்குகிறது.

ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய டென்ஷன்

ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய டென்ஷன்

ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய டென்ஷன் என்னவென்றால், மாதம் ஒரு முறை ரீசார்ஜ் வேலிடிட்டி முடிந்தவுடன் மீண்டும் அவற்றை ரீசார்ஜ் செய்வது தான். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், நாம் முன்னாள் பயன்படுத்திய அதே திட்டத்தை நமது கைகள் ரீசார்ஜ் செய்யக் கோரி வலியுறுத்தினாலும், நமது மனம் இன்னும் எதாவது ஒரு சிறந்த திட்டம் இருக்கிறதா என்பதை ஒரு முறையாவது செக் செய்யத் துடிக்கும். இந்த காரணத்தால், நமது பொன்னான நேரம் வீணடிக்கப்படும்.

சாமர்த்தியசாலிகள் ஏன் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்கிறார்கள்?

சாமர்த்தியசாலிகள் ஏன் வருடாந்திர திட்டத்தை தேர்வு செய்கிறார்கள்?

மற்றொரு புறம் மாதம்-மாதம் ரீசார்ஜ் செய்யும் பழக்கம் உங்களை எரிச்சலடைய செய்யும். இதைக் கவனித்த டெலிகாம் நிறுவனங்கள் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்தன. உண்மையைச் சொல்லப் போனால், விவரம் தெரிந்த சில டெலிகாம் வாடிக்கையாளர்கள், நீண்ட காலத் ரீசார்ஜ் திட்டங்களைத் தான் தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வழக்கமான மாதாந்திர திட்டம், இரண்டு மாத திட்டம் மற்றும் மூன்று மாத ரீசார்ஜ் பேக்குகளைத் தவிர, ஒரு வருடத் திட்டத்தையும் ஜியோ இப்போது வழங்குகிறது.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

1 ஆண்டுக்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் பழக்கம்

1 ஆண்டுக்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் பழக்கம்

பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கூட ஒரு வருடகால திட்டங்களை வழங்குகின்றது. 1 ஆண்டு செல்லுபடியாகும் நீளமான ரீசார்ஜ் திட்டங்கள் வழக்கமாக 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதுமானது. குறிப்பாக டென்ஷன் இல்லை நேரம் மிச்சமாகிறது. அதுமட்டுமின்றி உங்களுக்குக் கிடைக்கும் நன்மைக்கு நீங்கள் செலவு செய்யும் கட்டணமும் குறைவாக இருக்கும்.

குறைந்த விலையில் 1 வருட வேலிடிட்டி உடன் Jio திட்டம்

குறைந்த விலையில் 1 வருட வேலிடிட்டி உடன் Jio திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம், அதன் பயனர்கள் ஏராளமான டேட்டா நன்மையைப் பெறுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமே இந்த ஏராளமான டேட்டா நன்மை உங்களுக்கு நீண்ட கால செல்லுபடியாகும் 1 வருட வேலிடிட்டி உடன் குறைந்த விலையில் கிடைக்கிறது. நீண்ட கால திட்டத்தைத் தேடும் பயனர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

தினமும் 8 ரூபாய் செலவில் இவ்வளவு நன்மையா?

தினமும் 8 ரூபாய் செலவில் இவ்வளவு நன்மையா?

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ.2,999 என்ற விலைக்குக் கிடைக்கிறது. விலையைப் பார்த்ததும், அம்மாடியோவ் இது என்ன இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். 365 நாட்களுக்கு உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை வைத்துப் பார்க்கையில் இது குறைந்த கட்டணமே. காரணம், இந்த திட்டத்தின் படி 365 நாட்களுக்குத் தினமும் நீங்கள் வெறும் ரூ.8 என்ற அடிப்படையில் தான் கட்டணத்தைச் செலவு செய்கிறீர்கள்.

Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மை 365 நாட்களுக்கு

தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மை 365 நாட்களுக்கு

365 நாட்களுக்கு தினசரி ரூ.8 என்ற கட்டணத்தின் கீழ் உங்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கு 1 முறை ரீசார்ஜ் செய்ததும் 1 வருடத்திற்கு எந்தவித தடையும் இல்லாமல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.499 மதிப்பிலான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவசம்

ரூ.499 மதிப்பிலான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இலவசம்

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மொத்த டேட்டாவின் அளவு 912.5ஜிபி ஆகும். இத்துடன், இதில் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. பயனர்கள் ஜியோவிடமிருந்து இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவைப் பெறுவார்கள். இது ஆண்டுக்கு ரூ.499 என்ற கட்டண மதிப்பை உடையது. இது தவிர, ஜியோ பயனர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்ற அம்சங்களையும் அணுக அனுமதிக்கப்படுகிறார்கள். கூடுதல் சலுகைகள் அனைத்தும் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் கிடைக்கிறது.

ஜியோ வழங்கும் ரூ.4199 விலை திட்டம் சிறந்ததா?

ஜியோ வழங்கும் ரூ.4199 விலை திட்டம் சிறந்ததா?

Jio வின் நியாயமான பயன்பாடு கொள்கை (FUP) படி, 2.5ஜிபி டேட்டா முடிந்த பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 2.5ஜிபி டேட்டா, 100 SMS, Disney+ HotStar சந்தா, ஜியோவின் இலவச ஆப்ஸ் நன்மைகள் என்று ஏராளமான நன்மைகள் இந்த திட்டத்தில் குவிந்திருக்கிறது. ஜியோவிடம் இதேபோல் மற்றொரு நீண்ட கால ரீசார்ஜ் திட்டம் கூட இருக்கிறது. இது ரூ.4199 விலையில் கிடைக்கிறது.

கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!

ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் தான் சூப்பர் பெஸ்ட் பிளான்

ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் தான் சூப்பர் பெஸ்ட் பிளான்

இந்த திட்டமும் நீண்ட காலம் செல்லுபடியாகும் 365 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுக்கான பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ரூ.4199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா ஒரு நாளைக்கு 3ஜிபி ஆகும். ஆனால் இது ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை விட ரூ.1,200 அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டியதுள்ளது. இந்த இரண்டு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஜியோவின் ரூ.2,999 திட்டம் தான் பெஸ்டான தேர்வாக இருக்கிறது. உங்களுடைய தேர்வு எது என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Prepaid Plan Rs 2999 Is The Perfect Long Term Option For Indian Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X