போட்டாரு பாரு அம்பானி.. மறுபடியும் FREE அன்லிமிடெட் டேட்டா.. இந்த Jio போஸ்ட்பெய்ட் திட்டத்துல மட்டும்!
ஜியோ (Jio) நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கொடுக்கப்படுகிறது. 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும், அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம், தினசரிக்கு லிமிட் கிடையாது. வாய்ஸ் கால்களை போலவே அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படும். இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சலுகைகளை பார்க்கலாம்.
போஸ்பெய்ட் கஸ்டமர்களுக்கும் தினசரி லிமிட்டுடன் டேட்டா கொடுக்கப்பட்டது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும் கஸ்டமர்களாக இருந்தாலும், 4ஜி டேட்டாவுக்கு தினசரி லிமிட் இருந்தது. ஆனால், ஜியோ ரூ.649 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் எந்த கஸ்டமர்களாக இருந்தாலும், அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. கூடுதல் சலுகைகளும் ஏராளமாக இருக்கின்றன.

ஜியோ ரூ.649 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 649 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கும் வழக்கம்போல பில் சைக்கிள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த பில் சைக்கிள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். தினசரி லிமிட் விதிக்கப்படவில்லை. இது 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும் பொருந்தக் கூடிய சலுகையாக இருக்கிறது.
அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்றாலும், இது பொருந்தும். வேகம் மட்டும் 4ஜி அல்லது 5ஜி ஆக மாறுபடும். இந்த டேட்டா சலுகைகை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகையை இந்த திட்டம் கொடுத்துள்ளது. லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியும். ஜியோ டிவி (JioTV) சலுகையை கொடுத்து உள்ளது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டுகளை லிங்க் செய்ய முடியாது. ஒரேவொரு சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கும். அன்லிமிடெட் டேட்டாவை கொடுப்பதால், பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன.
இப்போது, கூடுதல் சலுகைகளுக்கு வரலாம், ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைப்பதை போலவே இந்த திட்டத்துக்கும் ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) சலுகைகள் கிடைக்கின்றன. முதல் சலுகையாக ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா (JioHotstar OTT Subscription) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது பில் சைக்கிள் வரையில் மட்டுமல்லாமல், 3 மாதங்களுக்கு கிடைக்கும்.
ஆகவே, ஒரு பில் சைக்கிள் முடிந்தவுடனேயே அடுத்த பில் சைக்கிளுக்கு மாற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, ஓடிடி சந்தாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த சலுகைகள் போக கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகள் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது. 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப் வழியாக பயன்படுத்தலாம்.
ஜியோ மொபைல் நம்பரை வைத்து ஜியோ கிளவுட் ஆப்பில் லாகின் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும்படி ஜெமினி ப்ரோ திட்டம் (Gemini Pro Plan) கிடைக்கிறது. இதில் 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். டிரைவ், ஈமெயில், டாக்ஸ், சீட்ஸ் உள்ளிட்ட கூகுள் ஆப்களில் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஜெமினி ஆப்பில் கிடைக்கும் நானோ பனானா உள்ளிட்ட அணுகல்களும் இந்த சந்தாவில் கிடைக்கிறது. இந்த ஒட்டுமொத்த சலுகைகளையும் ரூ.649 விலைக்கு இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா சலுகை வேண்டுமானால், இந்த திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications