Jio ஒரே போடு.. ரூ.450 எடுத்து வைங்க.. 1 சிம் கார்டுக்கு இல்ல.. 3 சிம் கார்டுக்கு வருது வாய்ஸ் கால்கள், டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனத்தில் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களாக இருந்தால், ரூ.449 விலைக்கு கிடைக்கும் திட்டத்தில் 3 சிம் கார்டுகளை கூடுதலாக இணைத்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகைகள் கிடைக்கும். ஆனால், இதில் ஜிஎஸ்டி கட்டணம் மற்றும் இணைப்பு கட்டணம் இருக்கும்.
இந்த ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் (Jio Postpaid Plan) விலை ரூ.449ஆக இருக்கிறது. இருப்பினும், ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும். மேலும், 1 சிம் கார்டுக்கு ரூ.150 கூடுதலாக செலுத்த வேண்டும். இப்படி 3 சிம் கார்டுகள் வரையில் இணைத்து கொள்ளலாம். போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் கிடைக்கும்.

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.449 (Jio Postpaid Plan Rs 449): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு வழக்கமாக பில் சைக்கிள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கொடுக்கப்படும்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஒரு பில் சைக்கிளுக்கு 75 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவை பில் சைக்கிளுக்கு முன்னதாகவே முடித்துவிட்டால், 1 ஜிபிக்கு ரூ.10 வசூலிக்கப்படும். ஆகவே, போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையை இதில் எதிர்பார்க்க முடியாது.
ஒருவேளை கூடுதலாக சிம் கார்டுகளை இணைக்கும்பட்சத்தில் 1 சிம் கார்டுக்கு ரூ.150 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது, திட்டத்தின் விலை ரூ.449 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து கூடுதலாக 1 சிம் கார்டுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். 2 சிம் கார்டுகளை இணைத்தால் ரூ.300 செலுத்த வேண்டி இருக்கும்.
இதுபோக கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் இருக்கும். இப்படி இணைக்கப்படும் சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். மாதத்துக்கு 5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதுபோக கூடுதல் சலுகைகளையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது.
ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) கிடைக்கிறது. இந்த ஆஃபரின் கீழ் ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. ஒரு பில் சைக்கிள் முடிந்தவுடன் உடனடியாக அடுத்த பில் சைக்கிளை தொடரும்பட்சத்தில் 3 மாதங்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது.
இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு கிடைப்பதை போலவே கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சந்தாவை 18 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்த முடியும். ஆகவே, பில் சைக்கிள்களை ஆக்டிவில் வைத்திருக்க வேண்டும்.
இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100 ஆக இருக்கிறது. ஆகவே, இதற்கு ஏற்ப பிரீமியம் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கப்பட்டு உள்ளது. நானோ பனானா (Nano Banana), வியோ வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட பிரீமியம் அணுகல்களையும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications