Home
News

அம்பானி ஆஃபர்.. ரீசார்ஜ் ஒன்னு.. சிம் கார்டு மூனு.. அன்லிமிடெட் வாய்ஸ்.. Jio யூசர்கள் குஷிதான்.. 2 திட்டங்கள்!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைவிட போஸ்ட்பெய்ட் திட்டங்களில் (Postpaid) அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. ஒரே போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஃபேமிலி சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா சலுகையை பெற்று கொள்ள முடியும். அதிகபட்சமாக 3 சிம் கார்டுகளை கூடுதலாக இணைத்து கொள்ளலாம். இப்படி 2 போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஜியோ நிறுவனம் இந்த சலுகைகளை கொடுக்கிறது. இந்த ஜியோ ஃபேமிலி சிம் கார்டு திட்டங்களின் (Jio Family SIM Card Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ப்ரீபெய்ட் திட்டங்களைவிட வித்தியாசமன சலுகைகள் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இருக்கின்றன. டேட்டா ரோலோவர், ஒரே ரீசார்ஜில் மூன்று சிம் கார்டுகளுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சேவை போன்ற சலுகைகள் வருகின்றன. இதில் ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்கும்படியான சலுகை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

அம்பானி ஆபர்.. ரீசார்ஜ் ஒன்னு.. சிம் கார்டு மூனு.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ 499 மற்றும் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ 749 ஆகிய திட்டங்களை பெறும் கஸ்டமர்களுக்கு ஃபேமிலி சிம் கார்டு இணைப்பு கொடுக்கப்படும். ஆனால், அந்த திட்டத்தில் ரூ.150 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும். இந்த விலை தனியாக ரீசார்ஜ் செய்வதைவிட அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், வரவேற்பு பெற்று வருகிறது.

ஜியோ ரூ 499 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 449 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளானது, பிரைமரி சிம் கார்டுக்கு கொடுக்கப்படும். அதேபோல இந்த சிம் கார்டுக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 3 ஃபேமிலி சிம் கார்டுகளை இணைப்பதற்கான அனுகல் கொடுக்கப்படும். ஆகவே, திட்டத்தின் விலை ரூ.499-க்கு மேல் கூடுதலாக ரூ.150 செலவு செய்தால் மேலும் ஒரு சிம் கார்டுக்கு சலுகைகள் கொடுக்கப்படும். இந்த கூடுதல் சிம் கார்டுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களின் சலுகைகளை பொருந்தும். ஆனால், டேட்டா அப்படியில்லை.

மாதத்துக்கு 5 ஜிபி மட்டுமே கிடைக்கும். அதேபோல எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்காது. இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கு அன்லிமிடெ் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை பொருந்தும். ஆனால், பிரைமரி சிம் கார்டுக்கு மட்டுமே இந்த 5ஜி டேட்டா கிடைக்கும். அதேபோல ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆப்களும் பிரைமரி சிம் கார்டுக்கு கிடைக்கும். அடுத்த திட்டம் எப்படி?

ஜியோ ரூ 749 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 749 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், கூடுதலாக ஓடிடி சந்தாவை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது. அதுவும் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை கொடுக்கிறது.

இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தின் பிரைமரி சிம் கார்டுக்கு முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்களும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன. ஆனால், டேட்டா கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 100 ஜிபி டேட்டாவை இந்த திட்டத்தில் பயன்படுத்தலாம். இந்த டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் பிரைமரி சிம் கார்டுக்கு வருகிறது.

இந்த சலுகைகள் போக ரூ.150 கூடுதலாக செலவு செய்தால் ஃபேமிலி சிம் கார்டு இணைப்பு கொடுக்கப்படும். இப்படி மூன்று சிம் கார்டுகள் வரையில் இணைக்கலாம். இந்த சிம் கார்டுகளுக்கு முன்பே சொன்னதை போல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரிக்கு 5 ஜிபி டேட்டா மட்டும் கொடுக்கப்படும். இந்த திட்டங்கள் மட்டுமே ஃபேமிலி இணைப்பை கொடுக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Postpaid Plan For Family Recharge With Unlimited Voice Calls Add on Upto 3 Family SIMs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X