Home
News

பழையபடி ரூ.300 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் Jio திட்டம்.. 42GB டேட்டா, கால்ஸ், SMS-னு எல்லாமே உண்டு!

ஒருவேளை, ரீசார்ஜ் கட்டண விலை உயர்விற்கு பின்னர் ரூ.300 க்குள் எந்த திட்டமும் இல்லை என்று உங்களிடம் யாரேனும் கூறி இருந்தால்.. அதை நம்பி கடந்த 1 மாத காலமாக ரூ,300 க்கு மேலான விலை கொண்ட ஜியோ (Jio) திட்டங்களையே நீங்கள் ரீசார்ஜ் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால்.. இனிமேலும் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் விலை உயர்விற்கு பின்னரும் கூட, ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் மொத்தம் 3 ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.300 க்குள் என்கிற பட்ஜெட்டில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

அந்த 3 திட்டங்களில் மிகவும் சுவாரசியமான மாறும் ஒப்பீட்டளவில் மற்ற திட்டங்களை விட அதிக நன்மைகளை வழங்கும் ஒரு திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பேச உள்ளோம். அது ஜியோவின் ரூ.299 திட்டமாகும். ஜூலை 3 ஆம் தேதிக்கு முன்பாக, அதாவது ஜியோ அதன் திட்டங்களின் விலைகளை உயர்த்துவதற்கு முன்பாக இது ரூ.239 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது; தற்ப்போது ரூ.60 விலை உயர்வை பெற்றுள்ளது.

பழையபடி ரூ.300 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் Jio திட்டம்!

ஆனாலும் கூட ரூ.300 க்குள் என்கிற மாதாந்திர ரீசார்ஜை (Monthly Recharge) தேடும் ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் இதுவே தற்போது பிரபலமான திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். டேட்டா நன்மையை பொறுத்தவரை, இது தினமும் 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 42 ஜிபி டேட்டாவை வழங்கும்.

இதுதவிர்த்து அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice CAlls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களும் (100 Free SMS) கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோக்ளவுட் (Jio Cloud) போன்ற ஜியோ ஆப்ஸ் நன்மைகளும் அணுக கிடைக்கும்.

ரூ.300 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்ற 2 திட்டங்கள் என்னென்ன? ரூ.189 மற்றும் ரூ.249 திட்டங்கள் ஆகும். ரூ.189 திட்டம் முன்னதாக ரூ.155 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. தற்போது ரூ.34 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது மொத்தம் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

அடுத்ததாக உள்ள ரூ.249 திட்டம் முன்னதாக ரூ.209 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. தற்போது ரூ.40 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. விலை உயர்விற்கு பின்னர், ஜியோ நிறுவனம் 3 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ட்தும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகமான 3 ஜியோ திட்டங்களின் விலை நிர்ணயம் மற்றும் நன்மைகள் என்ன? சில தினங்களுக்கு முன்னர் ஜியோ நிறுவனம் ரூ.329, ரூ.949 மற்றும் ரூ.1049 மதிப்புள்ள 3 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த 3 ப்ரீபெய்ட் திட்டங்களுமே டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் போன்ற வழக்கமான நன்மைகளுடன் சேர்த்து, கூடுதலாக ஓடிடி (ஓவர்-தி-டாப்) பலன்களையும் வழங்குகின்றன.

ரூ.329 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், கூடுதலாக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) நன்மை போன்ற நன்மைகளை வழங்குகிறது. இது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.

ரூ.949 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, ஜியோவின் 5ஜி வெல்கம் ஆபர் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இது 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.

ரூ.1049 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், கூடுதலாக ஜியோடிவி மொபைல் ஆப்ஸ் மூலம் சோனிலிவ் மற்றும்ஜீ5 ஆகிய ஓடிடி சந்தாக்கள், ஜியோ அன்லிமிட்ட் 5ஜி ஆபர் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதுவும் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Popular Plan Under Rs 300 With 28 Days Validity 42GB Data Unlimited Calls 100 SMS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X