Home
News

சைலன்ட் ஆக அறிமுகமான Jio Brain.. AI முதல் 6G வரை.. அம்பானியின் ருத்ர தாண்டவம்!

கூகுள் (Google), மைக்ரோசாப்ட் (Microsoft), சாம்சங் (Samsung) உட்பட.. உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான டெக் நிறுவனங்கள் ஆனது.. ஏஐ (AI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) தொடர்பான வேலைகளில் மற்றும் வளர்ச்சிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) ஆனது ஜியோ ப்ரெயின்-ஐ (Jio Brain) அறிமுகம் செய்துள்ளது. ஜியோ ப்ரெயின் என்றால் என்ன? இது என்னென்ன வேலைகளை செய்யும்? இதனால் யாருக்கு எல்லாம்.. என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

சைலன்ட் ஆக அறிமுகமான Jio Brain.. AI முதல் 6G வரை!

ஜியோ ப்ரெயின் என்றால் என்ன? ஜியோ ப்ரெயின் என்பது நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) தளமாகும். 5ஜி உடன் ஒருங்கிணைந்த இந்த சேவை (5G-integrated service) ஆனது டெலிகாம் நெட்வொர்க்குகள், நிறுவன நெட்வொர்க்குகள் மற்றும் தொழிற்துறை சார்ந்த தகவல் தொழில்நுட்ப சூழல்களில், வழக்கமான செயல்பாடுகளில் மெஷின் லேர்னிங் டூல்களை செயல்படுத்த உதவும்.

ஜியோ ப்ரெயினில் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது ஒரு என்டர்ப்ரைஸ் (Enterprise) மற்றும் மொபைல்-ரெடி லார்ஜ் லேங்குவேஜ் மாடல் (Mobile-ready large-language model - LLM) ஆகும். அதாவது இது கிளைன்ட்களை, மேம்படுத்தப்பட்ட ஜெனெரேட்டிவ் ஏஐ அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்கும்.

சைலன்ட் ஆக அறிமுகமான Jio Brain.. AI முதல் 6G வரை!

கிளவுட் நேட்டிவ் பிளாட்ஃபார்மில் (Cloud native platform) 500-க்கும் மேற்பட்ட ரெஸ்ட் ஏபிஐ-க்கள் (REST API) மற்றும் டேட்டா ஏபிஐ-க்கள் (Data API) உள்ளன. இது நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட மெஷின் லேர்னிங் சேவைகளை (Customized ML services) உருவாக்க அனுமதிக்கிறது.

ஜியோ ப்ரெயினை பயன்படுத்தும் நிறுவனங்களால் இமேஜ்-டு-வீடியோ ஜெனரேஷன், டெக்ஸ்ட்-டு-மியூசிக் ஜெனரேஷன், டெக்ஸ்ட்-டு-இமேஜ் மற்றும் வீடியோ ஜெனரேஷன், ஸ்பீச்-டு -ஸ்பீச் டிரான்ஸ்லேஷன், ஸ்பீச்-டு-டெக்ஸ்ட் டிரான்ஸ்லேஷன் உள்ளிட்ட நேச்சுரல் லேங்குவேஜ் ப்ராசஸ் (Natural Language Processing - NLP) மற்றும் ஏஐ ஜெனரேஷன்களை (AI generation) செய்ய முடியும்.

சைலன்ட் ஆக அறிமுகமான Jio Brain.. AI முதல் 6G வரை!

கோடிங்-ஐ பொறுத்தவரை, ஜியோ ப்ரெயின் இயங்குதளமானது கோட்களின் உருவாக்கம், விளக்கம், மேம்படுத்துதல் மற்றும் பிழைத்திருத்தம் ஆகியவற்றை செயல்படுத்துகிறது. கூடுதலாக, இது எம்எல் செயினிங், ஹைப்பர்பாராமீட்டர் ட்யூனிங், பீச்சர் என்ஜினீயரிங் மற்றும் பிற போன்ற முக்கிய எம்எல திறன்களையும் கொண்டுள்ளது. இந்த சேவைகள் அனைத்தையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனி சேவைகளாக அணுக கிடைக்கும்.

ஜியோவின் மூத்த துணைத்தலைவர் ஆன ஆயுஷ் பட்நாகரின் கூற்றுப்படி, நூற்றுக்கணக்கான பொறியாளர்களை உள்ளடக்கிய இரண்டு வருட ஆராய்ச்சி காலத்திற்கு பிறகு ஜியோ ப்ரெயின் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதை அவர் "தொழில்துறையின் முதல் 5ஜி உடன் ஒருங்கிணைந்த எம்எல் பிளாட்ஃபார்ம்" என்றும் குறிப்பிடுகிறார்.

"ஜியோ ப்ரெயின் ஆனது புதிய 5ஜி சேவைகளை உருவாக்கவும், நிறுவனங்களை மேம்படுத்தவும், நெட்வொர்க்குகளை மேம்படுத்தவும், 6ஜி மேம்பாட்டிற்கான களத்தை அமைக்கவும் உதவும் - மேற்கூறிய விஷயங்களில் மெஷின் லேர்னிங் என்பது ஒரு முக்கிய திறனாகும்" என்றும் ஆயுஷ் பட்நாகர் கூறி உள்ளார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஜியோ ப்ரெயினின் சரியான வெளியீட்டு தேதி எதையும் ஜியோ குறிப்பிடவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Platforms Introduced Jio Brain 5G Integrated AI Machine Learning Platform All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X