ரூ.200-க்கு வாரி வழங்கிய ஜியோ.. 1000+ டிவி சேனல்கள்.. YouTube பிரீமியம் மட்டுமல்ல.. 15+ ஓடிடி சந்தா!
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலான நபர்கள் யூடியூப் பயன்படுத்தாமல், ஒரு நாளை முடிக்க மாட்டார்கள். 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் மட்டுமல்லாமல், இப்போதெல்லாம் குறைந்தது 5 நிமிடங்கள் கொண்ட வீடியோக்களிலும் பல்வேறு விளம்பரங்கள் வருகின்றன. இதனால், யூடியூப் பிரீமியம் (YouTube Premium) சந்தாவை பெற பல கஸ்டமர்கள் முடிவெடுத்திருப்பார்கள்.
இவர்களுக்கு மலிவான விலையில் சந்தாவை கொடுக்கிறது, ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம். ரூ.200 மற்றும் ரூ.500 ஆகிய திட்டங்களில் மட்டும் யூடியூப் பிரீமியம் சந்தாவை கொடுக்கிறது. இதில் முதலாவது திட்டம் டேட்டா + ஓடிடி திட்டமாகவே இருப்பதால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகள் கொடுக்கப்படாது. இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஆனால், ரூ.500 விலை கொண்ட திட்டம் அப்படி கிடையாது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்களுடன் ஓடிடி சந்தாவையும் கொடுக்கும். கூடவே 1000+ லைவ் டிவி சேனல்களையும் கொடுக்கும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா, லேட்டஸ்ட்டாக சேர்க்கப்பட்ட ஜெமினி ப்ரோ சந்தா உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஜியோ ரூ.200 திட்ட விவரங்கள்: இந்த திட்டத்தை பெறுவதற்கு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 30 ஜிபி டேட்டாவை கொடுக்கும். இந்த நாட்களில் யூடியூப் பிரீமியம் (YouTube Premium) மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Amazon Prime Video Mobile Edition) சந்தா கிடைக்கும். மைஜியோ ஆப் வழியாக ஆக்டிவ் செய்யலாம்.
இந்த பிரீமியம் ஓடிடி ஆப்கள் போக ஜியோடிவி ஆப் வழியாக சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (SunNXT), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+) ஆகிய ஓடிடி ஆப்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், கான்ச்சா லங்கா (Kanccha Lannka), ஈடிவிவின் (ETVWin), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode) உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.
இந்த ஓடிடிகள் போக தாரங் பிளஸ் (Tarang Plus), டைம்ஸ் பிளே (Times Play) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கின்றன. இதேபோன்ற ஓடிடி சந்தா மற்றும் யூடியூப் பிரீமியம் சந்தாவுடன் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கு ஜியோ ரூ.500 திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.500 திட்ட விவரங்கள்: இந்த திட்டத்தை பெறுகிற கஸ்டமர்களுக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 56 ஜிபிக்கு 4ஜி டேட்டா கொடுக்கப்படும். 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 5ஜி ஸ்மார்ட்போன் வைத்து இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். வழக்கமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் கொடுக்கப்படும். ஓடிடி சலுகைகளை பார்க்கையில், முந்தைய திட்டத்தை போலவே யூடியூப் பிரீமியம் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சந்தா கொடுக்கப்படும். மேலும், சோனிலிவ் உள்ளிட்ட ஆப்களும் கிடைக்கும்.
கூடுதலாக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கிடைக்கும். 18 மாதகளுக்கு ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. 50 ஜிபிக்கு ஜியோஏஐகிளவுட் சந்தா கிடைக்கும். 1000+ லைவ் டிவி சேனல்களின் சந்தா கிடைக்கும். ஜியோஸ்டார், சோனி சேனல்கள், சன்நெட்வொர்க் சேனல்கள், வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி, ஈடிவி நெட்வொர்க் உள்ளிட்ட சேனல்களும் இதில் அடங்கும்.


Click it and Unblock the Notifications