நச்சுனு Jioரீசார்ஜ்.. வெறும் ரூ.239 போதும்.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. எஸ்எம்எஸ் இருக்கு.. ஆனால், வேலிடிட்டி?
ஜியோ நிறுவனத்தில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் ரூ.500 விலைக்கும் கம்மியாக கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதில் ரூ.239 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டமானது, மலிவான விலைக்கு கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா திட்டமாக இருக்கிறது. மொத்தம் 4 திட்டங்கள் இப்படி இருக்கின்றன. இந்த திட்டங்களின் முழு சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.239 திட்ட விவரங்கள் (Jio Rs 239 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 22 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, 33 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்பட்டுவிடும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

மேலும், அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) மற்றும் எஸ்டிடி ரோமிங் வாய்ஸ் கால்களை (STD Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். வழக்கமாக கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகள் வருகின்றன. ஜியோ டிவியில் ப்ரீ கன்டென்ட்கள் மற்றும் டிவி சேனல்கள் மட்டுமே கிடைக்கும். கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்காது.
ஜியோ ரூ.299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. சொல்லப்போனால், ஆரம்ப விலையில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த திட்டம் மட்டுமே ஆப்ஷனாக இருக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 42 ஜிபி டேட்டா கிடைக்கும்.
மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆகவே, 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். அன்லிமிடட் லோக்கல் கால்கள், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும். ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்து உள்ளது.
ஜியோ ரூ.319 திட்ட விவரங்கள் (Jio Rs 319 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு காலண்டர் மாத வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட் ஆப்கள் கிடைக்கும்.
இதுபோக கூடுதலாக ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கும். இதை 18 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். நானோ பனானா கிடைக்கிறது. 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இந்த கூடுதல் சலுகைகள் முன்னதாக பார்த்த ஜியோ ரூ.299 திட்டத்திலும் கிடைக்கிறது. சொல்லப்போனால், இந்த சலுகையை பெறுவதற்கு மினிமம் திட்டமாக, ரூ.299 திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ.329 திட்ட விவரங்கள் (Jio Rs 329 Plan Details): இந்த திட்டத்தில் முந்தைய திட்டத்தில் பார்த்த ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைக்கும். ஆனால், கூடுதலாக ஜியோ சாவன் ப்ரோ (JioSaavn Pro) சலுகை கூடுதலாக கொடுக்கப்படும். இதில் 28 நாட்கள் வேலிடிட்டி. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








