Home
News

ஓரம்கட்டிய அம்பானி.. இனி ரூ.75-க்கு ஒன்னு.. ரூ.125-க்கு ஒன்னு.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டங்கள்?

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு ரூ.150-க்கும் கீழ் மூன்று திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த திட்டங்கள் குறிப்பிட்ட கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிகராக அடிமட்ட விலையில் சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது. இந்த மூன்று திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மலிவு விலை திட்டங்கள் ஜியோபோன் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால், பிஎஸ்என்எல்லை போல்லல்லாமல், நாடு முழுவதும் 4ஜி சேவைகளுடன் கிடைக்கிறது. இதனால், கஸ்டமர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. டெலிகாம் கட்டணங்கள் உயர்ந்தும், இந்த திட்டங்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஓரம்கட்டிய அம்பானி.. இனி ரூ.75-க்கு ஒன்னு.. ரூ.125-க்கு ஒன்னு வருது!

ஜியோ ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 75 Prepaid Plan): இந்த ஜியோபோன் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த 28 நாட்களுக்கு 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது, தினசரிக்கு 100 எம்பி டேட்டா மற்றும் 200 எம்பி கூடுதல் டேட்டா கொடுக்கப்படும். இந்த 100 எம்பி டேட்டா தீர்ந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா குறைக்கப்படும்.

முக்கியமாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) சலுகை இந்த ஜியோ ரூ.75 ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் இதில் தினமும் 50 எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ள கிடைக்கும். மற்ற ஜியோ திட்டங்களை போல இதிலும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) கிடைக்கிறது.

ஜியோ ரூ.91 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 91 Prepaid Plan): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக ஜியோ ஆப்களின் சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. இதற்கு மொத்தமாக 3 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இதை தினமும் 100 எம்பி வீதம் பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே கூடுதலாக 200 எம்பி டேட்டா இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. மேலும், 100 எம்பி டேட்டா தீர்ந்துபோன பிறகு 64கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் சலுகைகள் இந்த ஜியோ ரூ.91 ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் கிடைக்கிறது.

ஜியோ ரூ.125 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 125 Prepaid Plan): கூடுதல் டேட்டா வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், இதில் முந்தைய திட்டங்களைவிட அதிகமாக டேட்டா கிடைக்கிறது. ஆகவே, தினசரிக்கு 0.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, 500 எம்பி டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இதுபோக கூடுதலாக 500 எம்பி டேட்டா கிடைக்கிறது. இந்த ஜியோ ரூ.125 ப்ரீபெய்ட் திட்டக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 11.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் சலுகைகள் இந்த ஜியோ ரூ.125 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்தமாக 300 எஸ்எம்எஸ்கள் செய்ய கிடைக்கிறது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் மலிவு விலைக்கு கிடைக்கின்றன. ஒருவேளை ஜியோபோன் இல்லையென்றால், மற்ற ஜியோ கஸ்டமர்களுக்கு ரூ.189 விலைக்கு திட்டம் தொடங்குகிறது. இதில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 300 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படும். இது ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Plans Under Rs 150 With Unlimited Voice Calls Best Offers At Cheapest Price Check List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X