இது அவுங்க நேரம்: அமோக வாய்ப்பு., வாழும் ஜியோ- ஏர்டெல், விஐ நிலை என்ன?

|

ஏர்டெல் மற்றும் விஐ திட்டங்களை விட ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் விலை தற்போது மிகவும் கவர்ச்சிகரமான விதத்தில் இருக்கிறது. ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் விலையை அதிகரித்தாலும் ஜியோ அதிக புதிய பயனர்களை தக்க வைக்கவே விரும்புகிறது. சந்தாதாரர்களின் சந்தைப் பங்கு அடிப்படையில் 4ஜி கவரேஜ்-ல் இந்தியாவின் நம்பர் ஒன் டெலிகாம் ஆபரேட்டராக ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. இருப்பினும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தற்போது விலை உயர்வை அறிவித்து உள்ளது. ஏர்டெல்லை விட ஜியோவின் கட்டணம் குறைவாக இருந்தாலும் ஜியோ தற்போதே பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. காரணம் ஜியோ அதீத அளவிலான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கொண்டிருப்பதே ஆகும்.

ப்ரீபெய்ட் திட்டங்கள் கட்டணம் உயர்வு

ப்ரீபெய்ட் திட்டங்கள் கட்டணம் உயர்வு

ஏர்டெல் அறிவிப்பை தொடர்ந்து வோடபோன் ஐடியா சமீபத்தில் ப்ரீபெய்ட் கட்டண உயர்வை அறிவித்தது. ஜியோ தற்போதுவரை காத்திருந்து திட்டங்களை விலையை அதிகரிப்பை வேடிக்கை பார்த்து வருகிறது. மேலும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தி வரும் இந்த நேரத்தில் ஜியோ பொறுமை காத்திருப்பது வாடிக்கையாளர்களை அதிகரிப்பதற்கு பொன்னான நேரமாகும்.

ஏர்டெல், வோடபோன் திட்டங்கள் விலை

ஏர்டெல், வோடபோன் திட்டங்கள் விலை

ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஏர்டெல், வோடபோன் திட்டங்கள் விலை முன்னதாக அதிகமாக இருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஜியோவின் திட்டத்தின் விலை சிறந்த முறையில் இருக்கிறது. ஜியோ நெட்வொர்க்குகளில் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்க இது சாதகமான நேரமாகும். டெலிகாம் நாடு முழுவதும் கூடுதல் ஸ்பெட்கத்தை வரிசைப்படுத்தி பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது.

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி

ஜியோ அறிமுகம் செய்த குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜியோ குறைந்த விலையில் அதிக அளவிலான டேட்டாக்களை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அதோடு ஜியோ நெட்வொர்க் பல்வேறு பகுதிகளிலும் நிறையான சேவையை வழங்கி வருகிறது. முன்னதாகவே பலரும் ஜியோவை விரும்பி வந்த நிலையில் தற்போது மேலும் ஏர்டெல், விஐ விலை உயர்வை அறிவித்துள்ளது. ஜியோவின் விலை மேலும் மலிவாக இருக்கிறது. இதன்மூலம் மேலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சுமூகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. 5ஜி சேவைகளை நிறுவனம் அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வரும் இந்த நேரத்தில் தற்போது இந்த காலக்கட்டம் ஜியோ மேலும் வாடிக்கையாளர்களை அதிகரிக்க சரியான வாய்ப்பாக இருக்கும்.

பாரதி ஏர்டெல் கட்டண உயர்வு

பாரதி ஏர்டெல் கட்டண உயர்வு

பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டண உயர்வை சற்றுமுன் அறிவித்துள்ளது. தற்போதைய கட்டண உயர்வுகள், தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஒரு பயனருக்குச் சராசரி வருவாயான (ARPU) 200 ரூபாயை நெருங்கும் கனவை நனவாக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதன் கட்டணங்களை தற்போது உயர்த்தியுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனமும் இதனை தொடர்ந்து கட்டணத்தை அதிகரிக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விலை பட்டியல்

புதிய விலை பட்டியல்

நீங்கள் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், கட்டாயம் இந்த புதிய விலை பட்டியலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் இந்த விலை புள்ளியில் தான் உங்களுடைய ரீசார்ஜ் திட்டங்கள், ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கிடைத்த ரூ.79 விலை கொண்ட அடிப்படைத் திட்டமானது, இப்போது ரூ.99 என்ற விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

அடிப்படை திட்டம்

அடிப்படை திட்டம்

கட்டண உயர்வுகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு விவரமும் இங்கே முழுமையாகக் கூறப்பட்டுள்ளது. விலை அதிகரிப்புடன் ஏர்டெல் நிறுவனம் அதன் அடிப்படை திட்டத்துடன், ஏர்டெல் பயனர்களுக்கான நன்மைகளையும் அதிகரித்துள்ளது. ரூ.99 திட்டத்தில் (முன்பு ரூ.79) இப்போது முழுமையாக ரூ. 99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா ஆகியவை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரீசார்ஜ் திட்டத்தின் விலை

ரீசார்ஜ் திட்டத்தின் விலை

ஏர்டெல் நிறுவனம் தற்போது அதன் ரீசார்ஜ் திட்டத்துடன் விலை மற்றும் விபரங்களைத் தெளிவாகக் காண்பிக்கும் அட்டவணையை நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது. இதன் படி முன்பு கிடைத்த ரூ.149 திட்டமானது இப்போது விலை அதிகரிப்பிற்குப் பின்னர் இனி ரூ.179 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் இப்போது அதன் பயனர்களுக்கு 2ஜிபி டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்த பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனமானது தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் குறைந்த விலையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதேபோல் நிறுவனம் அதிக விலை திட்டங்களை பல்வேறு சலுகைகளோடு வழங்குகிறது.

ஈராஸ் நவ் ஆதரவு

ஈராஸ் நவ் ஆதரவு

ஈராஸ் நவ் தனது அறிவிப்பில் பிஎஸ்என்எல்-ன் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதன் ப்ரீமியம் உள்ளடக்கத்தை வழங்க இருப்பதாக உறுதி செய்திருக்கிறது. பிஎஸ்என்எல் ஆனது ஈராஸ் நவ் ப்ளஸ் மெம்பர்ஷிப்பை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் சில பயனர்களுக்கு எஸ்டிவி செயலில் இருக்கும் வரை மட்டும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் அமல்படுத்திய விலை உயர்வைத் தொடர்ந்து விஐ (வோடபோன் ஐடியா) நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பயனரின் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அதே விலையுடன் நீடிப்பது அதன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க வாய்ப்ப உள்ளது என்றே கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio plans Available at attractive prices: Airtel, VI recharge plan price increase

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X