வெச்சாரு பாரு அம்பானி.. வெறும் ரூ.895 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!
முகேஷ் அம்பாயின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா மட்டுமே அடங்கிய திட்டத்தை 336 நாட்களுக்கு பெற வேண்டுமானால், ரூ.1748 விலை கொண்ட திட்டத்துக்கு செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால், அதே ஜியோ நிறுவனத்தில் வெறும் ரூ.895 விலையில் மாதத்துக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மற்றொரு திட்டமும் இருக்கிறது. இந்த ஜியோ வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் (Jio Yearly Prepaid Plan) விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த விலை மாற்றத்துக்கு காரணம் ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோபோன் மட்டும்தான். அதாவது, ஸ்மார்ட்போனில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் பெற வேண்டுமானால், ரூ.1748 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அதுவே உங்களிடம் ஜியோ போன் (Jio Phone) இருந்தால், வெறும் ரூ.895 விலையில் டேட்டாவுடன் அதே வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம்.

ஜியோ போன் ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Phone Rs 895 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிட்டத்தட்ட வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), மாதாந்திர டேட்டா (Monthly Data) மற்றும் மாதாந்திர எஸ்எம்எஸ் (Monthly SMS) சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதாவது, இந்த திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
இந்த 336 நாட்களை 28 நாட்கள் வீதம் பிரித்து 12 மாதங்களுக்கு சலுகைகளை கொடுக்கிறது ஜியோ நிறுவனம். ஆகவே, இந்த கணக்கின்படி 12 மாதங்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆகவே, 12 மாதங்களுக்கு 24 ஜிபி டேட்டா கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த மாதாந்திர டேட்டாவை முன்கூட்டியே பயன்படுத்திவிட்டால், வழக்கமாக கிடைக்கும் போஸ்ட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். அதாவது, 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு டேட்டா சலுகை கொடுக்கப்படும். எஸ்எம்எஸ் சலுகையும் அப்படியே கிடைக்கிறது.
ஆகவே, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ போன்களில் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இப்போது ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1748 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டம் கிட்டத்தட்ட டபுள் விலைக்கு கிடைக்கிறது. ஆனால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும். ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை ஸ்மார்ட்போன் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
12 மாதங்களுக்கும் சேர்த்து 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இந்த எஸ்எம்எஸ்கள் மொத்தத்தையும் முன்கூட்டியே அனுப்பிவிட்டால், கூடுதலாக அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் இருக்கும். இந்த சலுகைகளை தவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், டேட்டா இல்லாததால் இதை பயன்படுத்த டேட்டா வவுச்சர்கள் தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications