அதிக டேட்டா நன்மையை வழங்கும் ஜியோவின் ரூ.152 ப்ரீபெய்ட் திட்டம்.!

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்கள் மற்றும் அருமையான திட்டங்களை அறிவித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது தற்போது வந்த தகவலின்படி, ஜியோபோன் பயனர்கள் ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக் ரீசார்ஜ் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக்

ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக்

இந்த ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக் ரீசார்ஜ் ஆனது ஜியோபோன் பயனர்களுக்கு மாதத்திற்கு 56 ஜிபி அளவிலான அதிவேக 4ஜி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக அதிக டேட்டா தேடும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

JioPhone Next-ஐ விட குறைவான விலை.. ஆண்ட்ராய்டு 11 உடன் வந்த மிரட்டல் ஸ்மார்ட்போன்.. விலை என்ன தெரியுமா?JioPhone Next-ஐ விட குறைவான விலை.. ஆண்ட்ராய்டு 11 உடன் வந்த மிரட்டல் ஸ்மார்ட்போன்.. விலை என்ன தெரியுமா?

152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆ

ஆனால் ரூ.152 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது எந்த விதமான குரல் அழைப்பு நன்மைகளையும் வழங்காது. அதற்கு பதிலாக, தினசரி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் ரூ.152 ப்ரீபெய்ட் பேக் வேலிடிட்டி 28 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை பயன்படுத்த முடியும். எனவே மொத்தமாக இந்த திட்டத்தில் 56ஜிபி டேட்டா நன்மையை
பயன்படுத்த முடியும்.

Poco M4 Pro 5G இன்று இந்த விலையில் தான் அறிமுகமா.. அறிமுக நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?Poco M4 Pro 5G இன்று இந்த விலையில் தான் அறிமுகமா.. அறிமுக நிகழ்வை லைவ் பார்ப்பது எப்படி?

குறிப்பிடத்தக்கது

அதேபோல் ரூ.152 ப்ரீபெய்ட் பேக்கில் JioCinema, JioTV, JioCloud போன்ற Jio ஆப்களின் அணுகல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்களிடம் வாய்ஸ்கால் மற்றும் ஆப்களுக்கான அணுகலை வழங்கும் ஆக்டிவ் திட்டம் ஏற்கனவே இருந்தால், இந்த ரூ.152 ஆனது ஒரு டேட்டா ஆட்-ஆன் ஆகவே செயல்படும் என்று கூறப்படுகிறது.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

பயன்படுத்த ஜியோபோன் கண்டிப்பாக தேவைப்படும்.

மேலும் ஜியோபோன் பயனர்கள் ரூ.152 பேக்கை Jio.com, MyJio ஆப் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்கள் வழியாக ரீசார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. கிட்டத்தட்ட கம்மி விலையில் அதிக டேட்டாவை வழங்குகிறது ஜியோ நிறுவனம். ஆனாலும் இந்த ரூ.152 டேட்டா பேக்கை பயன்படுத்த ஜியோபோன் கண்டிப்பாக தேவைப்படும்.

 ஜியோபோன் நெக்ஸ்ட்

ஜியோபோன் நெக்ஸ்ட்

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் அட்டகாசமான ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?JioPhone Next எதிர்பார்த்த விலையில் வராததற்கு இதான் காரணமா? EMI விலை கம்மியாக இருந்தும் தயக்கம் ஏன்?

 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720×1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 13 எம்பி ரியர் கேமரா வசதி

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 13 எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். ஆனால் இந்த சாதனம் கைரேகை சென்சாருடன் வரவில்லை, அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் பேட்டர்ன் மற்றும் பின் அடிப்படையிலான அங்கீகாரத்தை நம்பியிருக்க வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த ஒரு வீடியோ: இனி கையில பணம் வேண்டாம்: UPI QR கோட் வழியா பணம் அனுப்புங்க போதும்.!ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த ஒரு வீடியோ: இனி கையில பணம் வேண்டாம்: UPI QR கோட் வழியா பணம் அனுப்புங்க போதும்.!

ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி

இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடியது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டிஜிட்டல் அவதாருடன் மெட்டாவர்ஸில் களமிறங்கும் ஆண்டவர் கமல் ஹாசன்: உலகநாயகனின் சொந்த 'உலகம்' தயார்.!டிஜிட்டல் அவதாருடன் மெட்டாவர்ஸில் களமிறங்கும் ஆண்டவர் கமல் ஹாசன்: உலகநாயகனின் சொந்த 'உலகம்' தயார்.!

நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது

இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 மூலம் இயக்கப்படுகிறது. எனவே இந்த
சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இதுதவிர 4ஜி, டூயல் சிம்கள், ப்ளூடூத் 4.1, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்.

இந்த Vi, Airtel மற்றும் BSNL திட்டங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.. இவையெல்லாம் 'கேம் சேஞ்சிங்' திட்டங்கள்இந்த Vi, Airtel மற்றும் BSNL திட்டங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.. இவையெல்லாம் 'கேம் சேஞ்சிங்' திட்டங்கள்

 ஜியோபோன் நெக்ஸ்ட்

மேலும் ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கூகுள் உடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட PragatiOS வசதி உள்ளது. கிட்டத்தட்ட பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது ஜியோபோன் நெக்ஸ்ட். குறிப்பாக ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தை இஎம்ஐ விருப்பங்கள் மூலம் வாங்கலாம்.

News Source: 91mobiles.com

Best Mobiles in India

English summary
Jio Phone Rs 152 data plan offers 2GB of data daily for 28 days: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X