வெடித்து சிதறிய ஜியோபோன்; உருளுமா அம்பானியின் தலை.? இல்லை சமாளிப்பாரா.?

|

முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் வெளியான ஜியோபோன் வாங்குவதற்கு பரவலாக கிடைக்கவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, இனி அதை யாருமே வாங்க விரும்பாத வண்ணம் ஒரு திகிலான செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது ஜியோபோன் வெடித்துள்ளதாக கூறப்படும் ஒரு சம்பவம் சார்ந்த புகைப்படம் மற்றும் விவரங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஒன்று வெடிப்பிற்கு உள்ளாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியது. அது சார்ந்த திகில் அடங்குவதற்குள் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமில்லாமல் பீச்சர் கருவிகள் மீதான அச்சத்தை கிளப்பிவிட்டுள்ளது.

வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நாசவேலை.?

வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நாசவேலை.?

இந்த ஜியோபோன் வெடிப்பு சம்பவம் எங்களுக்கும் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ள ரிலையன்ஸ் சில்லறை விற்பனையாளர் ஒருவர் அதன் ஆரம்ப விசாரணையின்கீழ் இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட நாசவேலை என்றும் கூறியுள்ளார்.

ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது.!

ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது.!

முதலில் ட்வீ ட் செய்யப்பட்ட புகைப்படம் பின்னர் ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப வலைப்பதிவான ரேடார் அறிக்கையின் படி, இந்த ஜியோபோன் வெடிப்பு சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது.

கீழே உள்ள பேட்டரிஅப்படியே இருக்கின்றது.!

கீழே உள்ள பேட்டரிஅப்படியே இருக்கின்றது.!

நீக்கப்படும் முன்னரே காணப்பட்டுள்ள புகைப்படத்தில் தொலைபேசியின் பின்புற பேனல் உருகிய நிலையில் காட்சிப்படுகிறது. ஆனால் கீழே உள்ள பேட்டரியோ அப்படியே இருக்கின்றது. மேலும் வெடிப்பின் தாக்கம் முன்பக்கத்தை எந்தவிதத்திலும்அ சிதைக்கவில்லை.

கடுமையான, தரமான கட்டுப்பாட்டு செயல்முறை

கடுமையான, தரமான கட்டுப்பாட்டு செயல்முறை

ரிலையன்ஸ் சில்லறை விற்பனையாளர் ஒருவர், "ஜியோபோன்கள் உலகளாவிய தராதரங்களுடன் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு தொலைபேசியும் கடுமையான, தரமான கட்டுப்பாட்டு செயல்முறையின் உள்ளே செல்கிறது.இதுவொரு நாசவேலை. வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன் வெடித்தது.!

கடந்த ஆண்டு ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன் வெடித்தது.!

மேலும் "அடுத்த விசாரணையை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ரிலையன்ஸ் லைஃப் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியது என்பதும், சமீப காலமாக சாம்சங், சியோமி மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பல மொபைல் உற்பத்தியாளர்கள் வெடிப்பு சம்பவங்களுக்குள் சிக்கி தவிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio Phone Reportedly Explodes, Company Says Damage Caused Intentionally. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X