Jio போட்ட போடு.. மாதம் ரூ.75 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 24 ஜிபி டேட்டா!
ஜியோ நிறுவனத்தின் ஜியோ போன் பிரைமா (Jio Phone Prima) கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் மலிவான விலைக்கு கிடைக்கும் மாதாந்திர மற்றும் வருடாந்திர திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மாதத்துக்கு ரூ.75 செலவு செய்தால் போதும் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பெற்று கொள்ளலாம்.
ஜியோ போன் பிரைமா கஸ்டமர்களுக்கு ரூ.75 முதல் ரூ.895 வரையில் விலை கொண்ட திட்டங்கள் கிடைக்கின்றன. ரூ.75 விலை கொண்ட திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும். அதுவே ரூ.895 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த விலையை மாதத்துக்கு கணக்கிட்டால் ரூ.75 மட்டுமே தேவைப்படும்.

ஆகவே, மாதத்துக்கு ரூ.75 செலவு செய்தால் போதும் வருடம் முழுவதும் சலுகைகளை பெற்று கொள்ளலாம். ரூ.895 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 12 மாதங்களுக்கு சலுகைகள் பிரித்து வழங்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டா, 50 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இப்படி 12 மாதங்களுக்கு தொடர்ந்து கொடுக்கப்படும்.
ஜியோ போன் பிரைமா ரூ 75 திட்ட விவரங்கள் (Jio Phone Prima Rs 75 Plan Details): ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டமாக இது இருக்கிறது. இதில் 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை ஜியோபோன் பிரைமா கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா கிடைக்கும்.
ஆகவே, 23 நாட்களுக்கு 2.3 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்கள் முழுவதும் பயன்படுத்தலாம். மேலும், 200 எம்பி டேட்டா கூடுதலாக கிடைக்கும். மொத்தமாக 2.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். இதுபோக 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மொத்தமாகவே 50 எஸ்எம்எஸ்களை இந்த திட்டம் கொடுக்கிறது.
மேலும், ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி சலுகைகளையும் இந்த ஜியோ போன் பிரைமா திட்டம் கொடுக்கிறது. இதே ரூ.75 விலையை மாதத்துக்கு கணக்கிட்டு 12 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.895 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 23 நாட்களுக்கு பதிலாக 28 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ போன் பிரைமா ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Phone Prima Rs 895 Plan Details): 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கொண்டுள்ளது. ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டியை ஜியோ போன் பிரைமா கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.
அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 28 நாட்களுக்கு மொத்தமாக 50 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இதே சலுகைகள் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் கஸ்டமர்களுக்கு பயன்படுத்த கிடைக்கும். ஆகவே, மொத்தமாக 24 ஜிபி டேட்டா, 600 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.
இந்த ஜியோ போன் பிரைமா ரூ 895 திட்டமானது, பிஎஸ்என்எல் நிறுவனத்தைவிட மலிவாக கிடைப்பதால் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படுகிறது. ஆனால், இதை ஜியோ போன் பிரைமாவில் மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு பீச்சர் போன்களில் பயன்படுத்த முடியாது. இதனாலேயே இவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








