2025-க்கு மறுபடியும்.. ரூ.75-க்கு 23 நாட்கள்.. ரூ.895-க்கு 336 நாட்கள்.. Jio யூசர்கள் குஷி.. அன்லிமிடெட் கால்!
2025ஆம் ஆண்டில் ஜியோ போன் (Jio Phone) கஸ்டமர்களுக்கு 7 ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plans) கிடைக்க இருக்கின்றன. குறைந்தபட்சம் ரூ.75 திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டியும், அதிகபட்சம் ரூ 895 திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுக்கும் இந்த ஜியோ போன் திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இந்த 2025ஆம் ஆண்டிலும் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும்.
ஜியோ போன் கஸ்டமர்களுக்கு 7 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இதில் டேட்டா சலுகைகள் குறைவாகவும், வாய்ஸ் கால் சலுகைகள் அதிகமாகவும் கிடைக்கிறது. ஆனால், 4ஜி வேகத்தில் கிடைக்கும் அடிமட்ட திட்டங்கள் இவை மட்டுமேயாகும். முதலில் ரூ.75 விலைக்கு கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்து விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 75 ப்ரீபெய்ட் திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 23 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) கால் சலுகைகள் கிடைக்கின்றன. ஒரு நாளுக்கு 100 எம்பி டேட்டா மற்றும் 200 எம்பி கூடுதல் டேட்டாவுடன் மொத்தம் 2.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
100 எம்பி மற்றும் 200 எம்பி கூடுதல் டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு டேட்டா குறைக்கப்படும். 50 எஸ்எம்எஸ் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இந்த ஜியோ போன் திட்டத்துக்கும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) சலுகைகள் கிடைக்கிறது. இதற்கு அடுத்து ரூ 91 விலையில் திட்டம் இருக்கிறது.
இந்த ஜியோ போன் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டா மற்றும் 200 எம்பி கூடுதல் டேட்டாவுடன் மொத்தமாக 3 ஜிபி டேட்டா பயன்படுத்த கிடைக்கிறது. முந்தை திட்டத்தை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 50 எம்எம்எஸ்கள் வருகின்றன. அதேபோல ஜியோடிவி, ஜியோசினிமா போன்ற ஆப்களும் கிடைக்கின்றன.
அடுத்தது ரூ 125 விலையில் திட்டம் கிடைக்கிறது. இதில் 23 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஏனென்றால், நாளொன்றுக்கு 500 எம்பி வீதம் 11.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதேபோல 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா ஆப்களை இந்த திட்டத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த திட்டத்துக்கு அடுத்து 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.152 மதிப்பில் ஜியோ போன் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் 500 எம்பி வீதம் தினசரி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 14 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ், 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு அடுத்து ரூ 186 விலைக்கு திட்டம் இருக்கிறது.
இந்த ஜியோபோன் திட்டத்துக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், 1 ஜிபி டேட்டாவை தினமும் கொடுக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு கொடுக்கிறது. ஜியோ ஆப்களின் சலுகையும் இந்த ஜியோபோன் திட்டத்துக்கு பொருந்தும். இதற்கு பிறகு 2 ஜிபி டேட்டாவை கொடுக்கும் திட்டம் இருக்கிறது.
இந்த திட்டத்தின் விலை ரூ 223 ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை கொடுக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகளையும் வழங்குகிறது. இப்போது, அதிக விலைக்கு கிடைக்கும் ஜியோ திட்டத்தை பார்ப்போம். ரூ 895 விலைக்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது.
இந்த ஜியோ போன் திட்டத்துக்கு 336 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த 336 நாட்களுக்கு 28 நாட்கள் வீதம் 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கொடுக்கப்படும். 50 எஸ்எம்எஸ்களை வீதம் 28 நாட்களுக்கு செய்து கொள்ளலாம். ஜியோ ஆப்களையும் இதில் பயன்படுத்தலாம். இந்த திட்டங்களே 2025 ஆம் ஆண்டில் கிடைக்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








