ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!

|

ஜியோ போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது அதன் விலை லீக் ஆகியுள்ளது. ஜியோபோன் குறித்து வெளியான முழு தகவல்களை பார்க்கலாம்.

ஜியோ போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம்

ஜியோ போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம்

ஜியோ போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது அதன் விலை லீக் ஆகியுள்ளது. ஜியோ போன் நெக்ஸ்ட் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியாக இருக்கிறது. இந்த சாதனம் இரண்டு வகைககளில் கிடைக்கும். ஆண்ட்ராய்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனை ஜியோவுக்காக கூகுள் வடிவமைத்துள்ளது.

யோ போன் நெக்ஸ்ட் குறித்த விலை

யோ போன் நெக்ஸ்ட் குறித்த விலை

ஜியோ போன் நெக்ஸ்ட் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அறிமுகத்துக்கு முன்னதாகவே இந்தியாவில் ஜியோ போன் நெக்ஸ்ட் குறித்த விலை ஆன்லைனில் கசிந்தது. ஜியோ மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

அடிப்படை மற்றும் மேம்பட்ட என இரண்டு வேரியண்ட்

அடிப்படை மற்றும் மேம்பட்ட என இரண்டு வேரியண்ட்

எகனாமிக் டைம்ஸ் தகவலின்படி, ஜியோ போன் நெக்ஸ்ட் அடிப்படை மற்றும் மேம்பட்ட இரண்டு வகைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பதிப்புகளின் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை ரூ.5000 ஆக இருக்கும் எனவும் மேம்பட்ட மாடல் விலை ரூ.7000 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த சாதனம் வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 10% தொகையை மட்டுமே முன்னதாக செலுத்தி வாங்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

முன்பணம் செலுத்தி சாதனம் வாங்கலாம்

முன்பணம் செலுத்தி சாதனம் வாங்கலாம்

முன்னதாக தொகை செலுத்தி சாதனம் வாங்கப்படும் பட்சத்தில் மீதமுள்ள தொகை கடனாக கருத்தில் கொள்ளப்படும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பிரமல் கேபிடல், ஐடிஎஃப்சி ஃபர்ஸட் அஷ்யூர் மற்றும் டிஎம்ஐ ஃபைனான்ஸ் ஆகிய ஐந்து வங்கிகளுடன் இணைந்து ஜியோ தனது 4ஜி ஸ்மார்ட்போனின் விற்பனைக்கு நிதியுதவி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

0 மில்லியன் யூனிட்கள் முதற்கட்டமாக விற்பனை

0 மில்லியன் யூனிட்கள் முதற்கட்டமாக விற்பனை

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் முதல் 6 மாதங்களில் ஜியோ போன் நெக்ஸ்ட்டின் 50 மில்லியன் யூனிட்களை விற்க டெலிகாம் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு வங்கியும் ரூ.10,000 கோடி வணிகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பிற நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சிஎஸ்) ரூ.2,500 கோடி மதிப்பிலான கடன் ஆதரவை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)

ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)

ஜியோ போன் சிறப்பம்சங்கள் குறித்து வெளியான வதந்திகளை பார்க்கலாம், ஜியோ போன் நெக்ஸ்ட் 1440 x 720 பிக்சல்கள் தீர்மானத்தோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) அடிப்படையில் இயங்கும் எனவும் கூறப்படுகிறது. ரேம் மற்றும் சேமிப்பு விவரங்கள் இன்னும் முழுமையாக தெரிவிக்கப்பட வில்லை.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

இருப்பினும் இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. ஜியோ போன் நெக்ஸ்ட் வாய்ஸ் அசிஸ்டெண்ட், மொழி பெயர்ப்பு, ஏஆர் ஃபில்டர் உடன் கூடிய ஸ்மார்ட் கேமரா உள்ளிட்ட பல அம்சங்களோடு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் வடிவமைப்பு முன்னதாகவே ஜூன் மாதத்தில் அம்பானியில் வெளியிடப்பட்டது. இது ஜியோவுக்காக கூகுள் வடிவமைத்த போன் என்பதால் இதில் ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் பாதுகாப்பு இணைப்பை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சிறந்த பாதுகாப்பு வசதி

சிறந்த பாதுகாப்பு வசதி

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் குறைந்த விலையில் வெளிவரும் என்று தகவல் வெளிவந்தது. 91mobiles அறிக்கையின்படி, விரைவில் ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் முன்பதிவு செய்யக் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என XDA டெவலப்பர் Mishaal Rahman தகவல் தெரிவித்துள்ளார். ஜி ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே அல்லது 6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. சாதனத்தின் இரண்டு ஸ்லாட்டுகளிலும் 4 ஜி ஆதரவுடன் இரட்டை சிம் கார்டு ஸ்லாட்டுகளை வழங்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Phone Next Price Leaked Before its Launch: Specs, Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X