அம்பானிய விட்டா யாருப்பா.. வெறும் ரூ.8000 போதும்.. பக்கா 5ஜி போன்.. 2024-க்கு குறிச்சாச்சு.. எப்போனு தெரியுமா?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் ஜியோபோன் 5ஜி (JioPhone 5G) மாடலானது எப்போது வெளியாகிறது? எந்த விலைக்கு வெளியாகிறது? என்னும் தகவல்கள் வெளியாகி மார்கெட்டை அறக்க பறக்க செய்துவிட்டது. குவால்காம் சிப்செட், ரூ.8000 பட்ஜெட் என்று மிரளவிட்டுள்ளது. விவரம் இதோ.
ஜியோ போன் 5ஜி அம்சங்கள் (Jio Phone 5G Specifications): இந்த போனில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். 4 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி வருகிறது. அதுமட்டுமல்லாமல், மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் (USB Type-C) போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ஜியோ போன் 5ஜி வேரியண்ட்டில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா (Macro Camera) வருகிறது.
8 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஜியோவின் பிரத்யேக பிரகதிஓஎஸ் (PragatiOS) சப்போர்ட்டும் கொடுக்கப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் (Qualcomm Snapdragon 480 Plus) சிப்செட் வருகிறது.
இந்த ஜியோ போனில் 5ஜி எஸ்ஏ (5G SA), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வைபை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகிறது. இந்த கனெக்டிவிட்டியில் என்3, என்5, என்28, என்40 மற்றும் என்78 போன்ற 5க்கும் மேற்பட்ட 5ஜி பேண்ட் சப்போர்ட் வர வாய்ப்புள்ளது.
மேலும், பேஸ் அன்லாக் (Face Unlock), சைடு மவுண்டெட் பிரிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகிறது. இந்த அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மார்கெட் வட்டாரங்களில் கசிந்தவை மட்டுமேயாகும். இந்த ஜியோ போன் 5ஜி போனானது, 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடந்துவரும்
மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2024 (Mobile World Congress 2024) நிகழ்வில் குவால்காம் நிறுவனம் இதை உறுதி செய்து இருக்கிறது.
இந்த போனின் விலை 99 டாலருக்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.8000 பட்ஜெட்டில் வெளியாவது உறுதியாகிவிட்டது. கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நடந்த போது, இதன் விலை ரூ.7,999ஆக நிர்ணயிக்கப்படும் என்ற தகவல் கசிந்தது.
இப்போது, இந்த தகவல் கிட்டத்தட்ட சரியாக இருக்கிறது. இந்த போனோடு 5ஜி திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே, 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் மும்முரமாக இருக்கின்றன. ஆகவே, ஜியோவின் 5ஜி திட்டங்களானது, அதன் 5ஜி போனின் அறிமுகத்துடன் இருக்கும் என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications








