பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஜியோபோன் 5ஜி சாதனம்.! ஆன்லைனில் வெளியான முக்கிய தகவல்.!

|

ஜியோபோன் 5ஜி சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் சில விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது ஜியோபோன் 5ஜி மாடல்.

91mobiles வெளியிட்ட

91mobiles வெளியிட்ட தகவலின்படி இந்த ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது ரூ.9000 அல்லது ரூ.12,000-விலையில்அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும்என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவு-ரேசன் பொருள் வாங்குவதில் இருந்த சிக்கல் நீக்கம்:இனி கைரேகை இல்லாவிட்டாலும், இது இருந்தால் போதும்புதிய உத்தரவு-ரேசன் பொருள் வாங்குவதில் இருந்த சிக்கல் நீக்கம்:இனி கைரேகை இல்லாவிட்டாலும், இது இருந்தால் போதும்

ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது

அதேபோல் ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்
என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும். அதேபோல் இந்த சாதனம்
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் பிஎஸ்என்எல்: ரூ.299, ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்- தினசரி 3ஜிபி டேட்டாபந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் பிஎஸ்என்எல்: ரூ.299, ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்- தினசரி 3ஜிபி டேட்டா

ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5-இன்ச்

இந்த புதிய ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1600×720 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல்வெளிவரும்.

தேசத்துரோக குற்றம் என கண்டனம்- உச்சநீதிமன்ற வழக்கு, கொந்தளிக்கும் எம்பிக்கள்: பூதாகரமாகும் பெகாசஸ் விவகாரம்!தேசத்துரோக குற்றம் என கண்டனம்- உச்சநீதிமன்ற வழக்கு, கொந்தளிக்கும் எம்பிக்கள்: பூதாகரமாகும் பெகாசஸ் விவகாரம்!

ஜியோபோன் 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் வசதி

இந்த ஜியோபோன் 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

தள்ளுபடியுடன் கிடைக்கும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை!தள்ளுபடியுடன் கிடைக்கும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- பிளிப்கார்ட் எலெக்ட்ரானிக்ஸ் தின விற்பனை!

ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள்உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல்.

ஜியோபோன் 5ஜி மாடலில் 5000

அதேபோல் இந்த ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்தஸ்மார்ட்போன் வெளிவரும்.

புதிய உத்தரவு-ரேசன் பொருள் வாங்குவதில் இருந்த சிக்கல் நீக்கம்:இனி கைரேகை இல்லாவிட்டாலும், இது இருந்தால் போதும்புதிய உத்தரவு-ரேசன் பொருள் வாங்குவதில் இருந்த சிக்கல் நீக்கம்:இனி கைரேகை இல்லாவிட்டாலும், இது இருந்தால் போதும்

அதேபோல்இந்நிறுவனம் 5ஜி சோதனையை

அதேபோல்இந்நிறுவனம் 5ஜி சோதனையை மேற்கொண்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில்ஜியோ 5ஜி நெட்வொர்க் ஸ்பீட் டெஸ்ட் ஸ்கிரீன்ஷாட் வெளியாகியுள்ளது. அதில் பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்றவேகத்தை தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது வெளியாகியுள்ள ஸ்கிரீன்ஷாட்-இல் 420Mbps பதிவிறக்க வேகம்(download speed) மற்றும் 412Mbps பதிவேற்ற வேகத்தை(upload speed) பார்க்க முடிகிறது. மேலும் இந்த 5ஜி பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட 8 மடங்கு
வேகமாகவும், பதிவேற்ற வேகம் 15 மடங்கு வேகமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாட்டில் உள்ள1000 நகரங்களுக்கான 5ஜி நெட்வொர்க் கவரேஜ் திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Phone 5G to launch soon at budget price: Full details!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X