Jio Phone 5G இம்மாத இறுதியில் அறிமுகமா?., விலை இதுவா இருந்தா, முதல் இந்திய பிராண்ட் இதுதான்!
சமீபத்தில் வெளியான தகவலின்படி, Jio Phone 5G ஆனது ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது ஆகஸ்ட் 29 அன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) வருடாந்திர பொதுக் குழு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் தான் ஜியோ போன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஜியோ போன் 5ஜி அம்சங்கள் மற்றும் விலை குறித்து வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம்.

ஜியோ போன் நெக்ஸ்ட்
ரிலையனஸ் ஜியோ முன்னதாகவே ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் நிறுவனம் விரைவில் 5ஜி போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான தொழில்நுட்ப நிறுவனம் 4ஜி ஆதரவுடன் ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற முதல் ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

ஜியோவின் 5ஜி சேவையும், 5ஜி ஸ்மார்ட்போனும்
அதன்படி தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான தகவலின்படி, ஆகஸ்ட் 29 நடப்பதாக கூறப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் ஜியோ போன் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்ய இருக்கிறது, எனவே ஜியோ போன் 5ஜி இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாக சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்
ரிலையன்ஸ் ஜியோ 5ஜி போன் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவுமில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவலை விரிவாக பார்க்கலாம்.

ஜியோ 5ஜி போன் சிறப்பம்சங்கள்
Jio 5G போன் சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவலை பார்க்கலாம். ஜியோ 5ஜி போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகலாம். மேலும் இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்கள் இடம்பெறும் என அறிக்கை தகவல் கூறுகிறது.
மறுபுறம் முன்னதாக வெளியான 4ஜி மாடல் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் என்ற ஒரே வேரியண்ட்டில் கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஜியோவால் உருவாக்கப்பட்ட பிரகதி ஓஎஸ்
ஜியோ 5ஜி போன் ஆனது, 6.5 இன்ச் எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 13 எம்பி பிரதான கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா இடம்பெறலாம்.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8 எம்பி செல்ஃபி ஷூட்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜியோ 5ஜி போனில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒன்று இருக்கிறது. அது ஜியோ 5ஜி போனானது கூகுள் உடன் இணைந்து ஜியோவால் உருவாக்கப்பட்ட பிரகதி ஓஎஸ் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.

ஜியோ 5ஜி போன் விலை
ஜியோ 5G போனின் விலை என்னவாக இருக்கும் என்று வெளியான தகவலை பார்க்கலாம். ஜியோ 5ஜி போன் ஆனது ரூ.12,000-க்கும் குறைவாகவே இருக்கும் என சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் 5ஜி ஆதரவோடு கூடிய மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த முதல் இந்திய பிராண்ட் என்ற பெருமையை ஜியோ பெறும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தீபாவளி தினத்தன்று விற்பனை
ஜியோ 5ஜி போன் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டால், தீபாவளி தினத்தன்று விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜியோ 5ஜி போன் குறித்த அறிவிப்புகளை நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications