Home
News

Jio Phone 3 Booking: எப்படி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் Jio Phone 3 முன்பதிவு செய்வது?

ரிலையன்ஸ் ஜியோ இதுவரை இரண்டு பியூச்சர் போன்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, ​​நிறுவனம் விரைவில் ஜியோ போன் 3 சாதனத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜியோ போன் 3 சாதனம் முன்பதிவிற்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் ஜியோ போன் 3 ஐ வாங்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஜியோ போன் 3

ஜியோ போன் 3

ஜியோ போன் 3 குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன, இதற்குக் காரணம் மலிவு விலையில் நிறுவனத்தின் முதல் பியூச்சர் போனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உண்மையில், ஜியோ போன் 1 சாதனம் இந்தியச் சந்தையில் முன்னணி பியூச்சர் போன் மாடலாக மாறியது. ஆனால், நேர்மையாக ஜியோ போன் 2 மாடலுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இப்பொழுது ஜியோ போன் 3-க்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஜியோ போன் 3 வாங்க ஆர்வமா?

ஜியோ போன் 3 வாங்க ஆர்வமா?

நீங்கள் ஜியோவின் வரவிருக்கும் மொபைல் போனை வாங்க ஆர்வமாக இருந்தால், உடனே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக வேண்டும். ஜியோ போன் 3 இன் அறிமுகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு முன்பாக, இந்த சாதனத்தை எளிதில் பெறுவதற்கான ஒரே முறை, முறையாய் முன்பதிவு செய்து வைப்பது தான். எப்படி முன்பதிவு செய்வது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜியோ போன் 1 மற்றும் ஜியோ போன் 2

ஜியோ போன் 1 மற்றும் ஜியோ போன் 2

ஜியோ போன் 1 மற்றும் ஜியோ போன் 2 சாதனங்கள் முன்பதிவிற்குத் தயாரான சில நிமிடங்களில் விற்று முடிந்தது என்பதை நாம் இந்த இடத்தில் மறக்கவேண்டாம். ஜியோ போன் சாதனங்களுக்குத் தேவை அதிகமாக இருந்ததால் வெகு விரைவாக முன்பதிவு முடிந்துவிட்டது. அடுத்த முன்பதிவிற்காக மக்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. எனவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள், உங்களுடைய புதிய ஜியோ போன் 3 ஐ முன்பதிவு செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜியோ போன் 3 ஆன்லைனில் முன்பதிவு செய்ய

ஜியோ போன் 3 ஆன்லைனில் முன்பதிவு செய்ய

ஜியோ போன் 2 முன்பதிவு செய்யப்பட்டது போலவே ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகள் வழியாக ஜியோ போன் 3 சாதனமும் முன்பதிவிற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ போன் 3 சாதனத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முக்கியமாக இரண்டு முறைகள் இருக்கிறது, Jio.com இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து முன்பதிவு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். அதோடு, உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து மைஜியோ ஆப் மூலம் ஜியோ போன் 3 ஐ முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவின் போது உஷாராக இருங்கள்

முன்பதிவின் போது உஷாராக இருங்கள்

ஜியோ போன் 3 முன்பதிவு செய்ய, வலைத்தளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி சப்மிட் பட்டனை கிளிக் செய்யுங்கள். உங்களுடைய முன்பதிவு வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்படும், அடுத்து உங்களுக்கான ஜியோ போன் 3 எதிர்பார்க்கப்படும் முன்பதிவு மற்றும் விநியோக தேதி வழங்கப்படும். எப்போதும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து மட்டுமே முன்பதிவு செய்யுங்கள், முன்பதிவு செய்ய வேறு எந்த வலைத்தளத்தையும் கூகிளில் சர்ச் செய்ய வேண்டாம்.

ஆஃப்லைன் மூலம் ஜியோ போன் 3 முன்பதிவு செய்ய

ஆஃப்லைன் மூலம் ஜியோ போன் 3 முன்பதிவு செய்ய

ஆஃப்லைன் மூலம் ஜியோ போன் 3 சாதனத்தை முன்பதிவு செய்வது மிகவும் எளிமையானது மற்றும் நம்பிக்கையானது. காரணம் முன்பதிவு செய்ய நீங்கள் நேரடியாக அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜியோ ஷோரூமிற்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரண்டு முறைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. ஆஃப்லைன் பயன்முறையில், நீங்கள் பதிவு விவரங்களை கடையில் நேரடியாகச் சென்று வழங்க வேண்டும்.

 ஜியோ பெயரில் போலி சேவைகள்

ஜியோ பெயரில் போலி சேவைகள்

ஆன்லைன் பயன்முறையில் இதே தகவலை நீங்கள் வலைத்தளம் வழியாக விவரங்களைச் சமர்ப்பிக்கிறீர்கள். ஆஃப்லைன் முன்பதிவுக்கு, ஜியோவால் அங்கீகரிக்கப்பட்ட கடைகளை மட்டும் நேரில் சென்று அணுகுங்கள். ஜியோ பெயரில் போலி ஆன்லைன் வலைத்தளங்கள் மற்றும் போலி கடைகளும் செயல்பட்டு வருகிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் ஜியோ நிறுவனம் ஜியோ போன் 3 வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

விரைவில் வெளிப்படும்

விரைவில் வெளிப்படும்

இருப்பினும் முன்பதிவிற்கு விரைவில் ஜியோ போன் 3 கிடைக்கும் என்று தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதேபோல், ஜியோ போன் 3 வெளிவருவதில் தாமதம் ஏற்படலாம், தாமதம் காரணமாக, ஜியோ போன் 3 இன் வெளியீடு 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குத் தள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போன் 3 இன் வெளியீட்டுத் தேதி அல்லது முன்பதிவு தேதி விரைவில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Phone 3 Booking: How to Book Jio Phone 3 Online and Offline Methods : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X