Home
News

Google Pay, PhonePe கதை முடிந்தது.. Jio Payment-க்கு அப்ரூவல்.. இனி ஆன்லைன் பரிவர்த்தனை.. RBI கொடுத்தாச்சு!

இந்தியாவில் முக்கால்வாசி டிஜிட்டல் பணப்பரிவத்தனைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) ஆப்களை தூக்கி சாப்பிடும்படியான அப்ரூவலை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India -RBI) ஆனது ஜியோ பேமெண்ட் (Jio Payments) நிறுவனத்துக்கு கொடுத்து இருக்கிறது.

இனிமேல் ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக (Online Payment Aggregator) ஜியோ பேமெண்ட் களமிறங்குகிறது. ஆர்பிஐ கொடுத்த இந்த அப்ரூவலால் என்னென்ன மாறப்போகிறது? யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions), வாலெட் பரிவர்த்தனைகள் (Wallets Transactions) மட்டுமல்லாமல், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனையில் ஜியோ பேமெண்ட் என்ன செய்யப்போகிறது?

Google Pay, PhonePe கதை முடிந்தது.. Jio Payment-க்கு அப்ரூவல்.. இனிமே?

முகேஷ் அம்பானியின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் மூலம் பல்வேறு சேவைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. யுபிஐ போலவே பரிவர்த்தனைகள் முதல் ரூ.10-க்கு டிஜிட்டல் கோல்டு வரையில் அடுத்தடுத்து களமிறங்கி வருகிறது. இப்போது, ஜியோ பேமென்ட் சொல்யூஷன்ஸ் (Jio Payment Solutions) ஆனது ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக அப்ரூவலை பெற்று இருக்கிறது.

அக்டோபர் 28ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக செயல்பட ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனுமதி வழங்கிவிட்டது. இந்த பேமெண்ட் அக்ரிகேட்டர் அப்ரூவல் மூலம் டிஜிட்டல் பேமெண்ட்களை செய்துகொள்வதற்கான மூன்றாம்-தரப்பு சேவைக்கு (Third-party Service) அனுமதி கிடைக்கும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ பரிவர்த்தனைகளை வழங்க முடியும்.

Google Pay, PhonePe கதை முடிந்தது.. Jio Payment-க்கு அப்ரூவல்.. இனிமே?

கூகுள் பே, போன்பே, பேடிம் போன்ற கோடிக்கணக்கான யூசர்களை வைத்திருக்கும் ஆப்களும் இந்த அப்ரூவல் மூலம் சேவைகளை கொடுக்கின்றன. இதில் பேடிஎம் நிறுவனம் பேமெண்ட் பேங்க் மூலம் வாலெட் சேவையை வழங்கியது. இதேபோல ஜியோ பேமென்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனமும் ஜியோ பேமெண்ட் பேங்க் (Jio Payments Bank) சேவையை வைத்திருக்கிறது.

இந்த சேவை மூலம் பயோமெட்ரிக் சாரிபார்ப்பு மற்றும் பிசிகல் டெபிட் கார்டு கொண்டு கஸ்டமர்கள் டிஜிட்டலாக சேமிப்பு கணக்குகளை தொடங்க முடியும். இதுவும் பேங்க் மூலம் கிடைக்கும் சேவைகளை கொடுக்கக்கூடியது. இந்த ஜியோ பேமெண்ட் பேங்க் மூலம் 15 லட்சம் அக்கவுண்ட்கள் ஓப்பன் செய்யப்பட்டுள்ளன. இப்போது, அக்ரிகேட்டர் அப்ரூவலும் கிடைத்துவிட்டது.

ஆகவே, வாலெட் சேவைகள், டிஜிட்டல் பெமெண்ட், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற சேவைகளை எளிதாக வழங்க முடியும். இது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களுக்கு மாற்றாக வரவும் வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் ஜியோ நிறுவனம் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய பெரும்பாலான கஸ்டமர்கள் தயாராகவும் இருக்க வேண்டி வரலாம்.

ஏனென்றால், கூகுள் பே போன்ற வெளிநாட்டு நிறுவனம் மூலம் இந்தியாவின் பெரும்பாலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே, அந்தந்த பேங்க் ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்த தொடங்கி இருக்கிறது.

இப்போது, இந்தியாவில் மிகப்பெரும் நிறுவனமான ஜியோவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்துகொள்வதற்கான அனுமதியை கொடுத்து இருக்கிறது. முன்னதாக, ஜியோ ஃபைனான்ஸ் சர்வீசஸ் (Jio Financial Services) நிறுவனமானது, டிஜிட்டல் கோல்டு விற்பனையில் களமிறங்கியது. வெறும் ரூ.10 இருந்தால் போதும் ஸ்மார்ட்கோல்டு (SmartGold) வாங்கி கொள்ள அனுமதிக்கிறது.

இந்த சேவைகளையும் கூகுள் பே, போன்பே நிறுவனங்கள் வழங்குகின்றன. இப்போது, ஜியோவும் அதை கையில் எடுத்துள்ளது. இந்த சேவை வழங்கிய அதே நேரத்தில்தான் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கான ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டர் அப்ரூவலை பெற்றது. இப்படி பக்கா திட்டத்துடன் ஜியோ களமிறங்கி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Payments Gets Approval From RBI As Online Payment Aggregator For Digital Transactions Like GPay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X