Home
News

அம்பானி தரும் ரூ.5000 மதிப்பு இலவச கிஃப்ட்.. Jio சிம் இல்லாட்டியும் கிஃப்ட் உண்டு.. உடனே ஆதார், PAN எடுங்க..

அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) குழுமம், தற்போது ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் (Jio Payments Bank) சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்து, சேவையை வழங்கி வருகிறது. பண்டிகை கால சிறப்பு பரிசாக, ரூ. 5000 மதிப்பிலான இலவச கிஃப்ட்டை (Jio Rs 5000 Worth Gift) இப்போது வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், உங்களிடம் ஜியோ சிம் கார்டு (Jio SIM card) இல்லாவிட்டாலும் இந்த 5000 ரூபாய் மதிப்பிலான கிஃப்ட்டை நீங்கள் பெற முடியும். இதை எப்படி சில நிமிடங்களில் பெறுவது என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

ஜியோ நிறுவனம் சமீபத்தில் அதன் ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவையை (Jio payments bank service) அறிமுகம் செய்தது. இந்த சேவையின் மூலம் இந்திய மக்கள் இப்போது சிறப்பான டிஜிட்டல் பேங்கிங் (digital banking) சேவையை அனுபவிக்க முடியும். 2024 ஆம் ஆண்டின் இறுதிக்கு (year ender 2024) வந்துவிட்டோம். ஒவ்வொரு வருடத்திலும், இந்த இறுதி வாரம் கோலாகலமான கொண்டாட்ட பண்டிகை காலமாக கொண்டாடப்படுகிறது.

அம்பானி தரும் ரூ.5000 மதிப்பு இலவச கிஃப்ட்.. Jio சிம் தேவையில்லை..

அம்பானி தரும் ரூ.5000 மதிப்பு இலவச கிஃப்ட்.. Jio சிம் இல்லாட்டியும் கிஃப்ட் உண்டு:

கிறிஸ்துமஸ் பண்டிகை (Christamas festival) முதல் புத்தாண்டு கால சிறப்பு கொண்டாட்டம் (New year festival celebration) வரை அடுத்த 5 நாட்கள் சிறப்பாக இருக்க போகிறது. இந்த 5 நாட்களை இன்னும் சிறப்பாக்கும் விதத்தில் ஜியோ நிறுவனம் தற்போது 5000 ரூபாய் மதிப்பிலான கிப்ட்டை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த 5000 ரூபாய் கிஃப்ட்டை பெற உங்களிடம் ஜியோ சிம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

ஆனால், ஜியோ பேங்க் (Jio Banks) சேவையின் கீழ் ஒரு புதிய வங்கி கணக்கை நீங்கள் திறக்க வேண்டும். ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க்ஸ் சேவையின் கீழ் புதிதாக சேவிங் அக்கௌன்ட் திறக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 மதிப்பிலான இலவச கிப்ட் கிடைக்கிறது. இந்த புதிய ஜியோ பேங்க்ஸ் சேவிங்ஸ் கணக்கை (Jio banks savings account) நீங்கள் டிசம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 31, 2024 ஆகிய நாட்களுக்குள் திறக்க வேண்டும்.

ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவிங்ஸ் அக்கௌன்ட் (Jio payments banks savings account):

புதிய கணக்கை திறக்க குறைந்தது 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்களுக்குள் மட்டுமே நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும். வெற்றிகரமாக, புதிய ஜியோ பேங்க்ஸ் சேமிப்பு கணக்கை திறந்த பிறகு, உங்களுக்கு மெக்டொனால்ட்ஸ் (McDonald's), ஈஸ் மை ட்ரிப் (EaseMyTrip) மற்றும் மேக்ஸ் ஃபேஷன் (Max Fashion) போன்ற பிராண்டுகளின் ரிவர்ட் கூப்பன்களை பெறுவீர்கள். இதன் மொத்த மதிப்பு ரூ. 5000 ஆகும்.

புதிய ஜியோ பெய்மென்ட்ஸ் பேங்க் சேவையை திறக்க நீங்கள் ஒரு இந்திய குடுமக்களாக (Indian resident) இருக்க வேண்டும். கட்டாயமாக 18 வயதை பூர்த்தி செய்திருக்க (above 18 years of age) வேண்டும். உங்களிடம் எந்த நெட்வொர்க் சிம் கார்ட் இருந்தாலும் பரவாயில்லை அல்லது ஜியோ சிம் இருந்தாலும் பரவாயில்லை, உங்கள் போன் மூலம் சில நிமிடங்களில் Jio Bank கணக்கை இலவசமாக திறக்கலாம்.

Jio நம்பர் தேவையில்லை.. ஆதார் அட்டை மற்றும் PAN கார்டு மட்டும் போதும்:

ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகாரத்தை (biometric-based authentication) வழங்குகிறது. இது விர்ச்சுவல் மற்றும் பிஸிக்கல் ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு (virtual and physical RuPay Platinum debit cards) ஆகியவற்றை வழங்குகிறது. புதிய ஜியோ பேமெண்ட்ஸ் பேங்க் கணக்கை திறக்க உங்கள் கையில் ஆதார் கார்டு (Aadhaar card) மற்றும் PAN கார்டு (PAN card) இருந்தால் போதும்.

இந்த கணக்கை திறப்பதில் கிடைக்கும் சிறப்பு என்னவென்றால், இதை இலவசமாக நீங்கள் ஜியோ நம்பர் இல்லாமல் கூட திறக்கலாம். இலவசமாக ஒரு சேமிப்பு கணக்கை திறப்பதன் மூலம் உங்களுக்கு 5000 மதிப்பிலான பரிசு கிடைக்கிறது. இந்த கணக்கை நீங்கள் திறந்த பிறகு, இதை முழுமையாக பயன்படுத்தாமல், கணக்கு இன்ஆக்டிவ் நிலைக்கு சென்றாலும் அபராதம் என்று எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்று ஜியோ தெரிவித்துள்ளது. Jio UPI ஆப்ஸ் மூலம் பேங்கிங் சேவையை நீங்கள் பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Payments Bank Festive Rewards Worth Rs 5000 To Open a New Savings Account Using Aadhaar and PAN Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X