ஜியோபோன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி: ஜியோ பே UPI.! எப்போது முதல்?

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வரகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோபோன்

இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோபோன் பயனர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ தனது UPI அடிப்படையில் கொடுப்பனவு தளத்தை உருவாக்க துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அன்மையில் வெளிவந்த BGR வலைதளத்தின் தகவல்படி இந்த அட்டகாசமான சேவை அதன் பொது அறிமுகத்திற்கு முன்பு ஒரு வருடத்திற்கும் மேலாக சோதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கும் என்

இந்த சேவை ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கும் என்று கூறப்பட்டது, ஆனாலும் இந்நிறுவனம் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. மேலும் வெளிவந்த தகவலின்படி ஆயிரம் பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை முதலில் அறிமுகமாகும் என்றும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டது. இருந்தபோதிலும் இந்த சேவை ஜியோபோன் பயனர்கள் அனைவருக்கும் எப்போது கிடைக்கும் என எந்த தகவலும் இல்லை.

சாம்சங் நிறுவனத்தின் அருமையான திட்டம்? இந்தியாவில் உற்பத்தி.! வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?

ஜியோ பே சேவையானது முதலில் ஜியோபோன்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஜியோ பே சேவையானது முதலில் ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது ஜியோபோன் 2 பயனர்களுகக்கு கிடைக்கும் என தெளிவாக தெரியவில்லை.

இந்த சேவையை ஒரு

ஜியோபோன் வரும் இந்த சேவையை ஒரு செயலியில் காண்பிப்பதாகக் கூறும் மூன்று படங்களையும் ஒரு சில வலைதளங்கள் வெளியிட்டன. ஆனால் நீங்கள் கீழே காணக்கூடிய படங்கள் குறைந்த தெளிவுத்திறன் கொண்டவை, அவற்றிலிருந்து எதையும் கண்டறிவது கடினம். நிச்சயமாக, ஜியோபோன் சாதனங்களுக்கு ஸ்கிரீன்ஷாட் செயல்பாடு இல்லை, இது இந்த விஷயத்தில் ஒரு பெரிய உதவியாகஇருந்திருக்கும்.

இப்போது இந்த காரணங்களுக்கு இ-பாஸ் கிடைக்கும்! எப்படி சரியாக விண்ணப்பிப்பது?

 தகவலின்படி ஜியோபோனுக்கான

வெளிவந்த தகவலின்படி ஜியோபோனுக்கான ஜியோ பே உடன் இயக்கப்பட்ட POS (பாயிண்ட்-ஆஃப்-சேல்) இயந்திரங்களில் NFC மூலம் ‘Tap and Pay' எனும் தொடர்பு இல்லாத கட்டணத்தைப் பயன்படுத்துகிறது. துவக்க பார்ட்னர்களில் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு, இண்டஸ்இண்ட், எஸ்பிஐ, கோட்டக், யெஸ் பேங்க் மற்றும் ஆர்.பி.எல் வங்கி ஆகியவை அடங்கும். அதாவது, இந்த வங்கிகளிடமிருந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் (மாஸ்டர்கார்டு மற்றும் விசா) இரண்டையும் பணம் செலுத்த பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.13,999 மட்டுமே: போகோ எம் 2 ப்ரோ அடுத்த விற்பனை இன்று- மிஸ் பண்ணாதிங்க!

கொண்டுவர இந்திய தேசிய

மேலும் ஜியோ நிறுவனம் தனது UPI கொடுப்பனவு சேவையை அதன் 4ஜி சார்ந்த தொலைபேசிகளுக்கு கொண்டுவர இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதிலும் முன்னணியில் உறுதியான நடவடிக்கையை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை. ஜியோ தனது UPI செலுத்தும் சேவையை வரவிருக்கும் நாட்களில் அதிக தளங்களுக்கு வெளியிடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

photo courtesy: BGR

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Pay UPI now available on Jio Phone Users: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X