Home
News

அம்பானியின் அதிரடி பிளான்.. மலிவு விலையில் புதிய சாதனத்தை கொண்டுவரும் Jio.. அது என்ன?

ஜியோ (Jio) நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மெட்டா (Meta) நிறுவனத்துடன் இணைந்து ஜியோ நிறுவனம் புதிய விஆர் ஹெட்செட்டை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ இந்திய சந்தையில் மலிவு விலையில் புதிய விஆர் ஹெட்செட்டைக் கொண்டு வர மெட்டாவுடன் இணைந்து செயல்படுகிறது. குறிப்பாக இந்த புதிய விஆர் ஹெட்செட் ஆனது மேம்பட்ட புதிய தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஹெட்செட் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும்.

மலிவு விலையில் புதிய சாதனத்தை கொண்டுவரும் ஜியோ.. அது என்ன?

Meta நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி திட்டமான Horizon உரிமம், ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்குவது தொடர்பாக மெட்டா பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக மெட்டா நிறுவனம் ஆனது Horizon OS பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. அந்த வகையில் ஜியோவின் அடுத்த VR ஹெட்செட் மாடலுக்கு Horizonஐப் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக தான் ஜியோவுடன் மெட்டா இணைந்து பணியாற்ற இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவில் மெட்டா நிறுவனத்துக்கு 10 சதவீதம் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ மற்றும் ரிலையன்ஸ் இடையேயான இந்த ஒப்பந்தம் 2020 இல் நடந்தது. எனவே விரைவில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஒரு அசத்தலான விஆர் ஹெட்செட்-ஐ கொண்டுவரும். மேலும் ஜியோவின் ஏஜிஎம் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இந்த மலிவு விலை விஆர் ஹெட்செட் குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் ஜியோ நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில், JioDive VR ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது. ஜியோடைவ் விஆர் (JioDive VR) ஹெட்செட்டில், வாடிக்கையாளர்கள் 360 டிகிரி ஸ்டேடியத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் அனுபவம் கொடுக்கும் மேலும் ஜியோடைவ் ஹெட்செட்டின் விலை ரூ. 1399 மட்டுமே.

குறிப்பாக ஜியோடைவ் ஹெட்செட் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் வேலை செய்கிறது. இந்த சாதனம் கொடுக்கும் 360 டிகிரி முழு அனுபவத்தைப் பெற, JioImmerse செயலியும் தேவைப்படுகிறது. தற்போது ஒரு நல்ல விஆர் ஹெட்செட் தேடும் பயனர்கள் இந்த ஜியோடைவ் ஹெட்செட் மாடலை வாங்குவது நல்லது.

அதேபோல் கடந்த மாதம் ஜியோ நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இதனால் பல்வேறு வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதேசமயம் இன்னும் சில வாரங்களில் முழுமையாக 4ஜி சேவை அறிமுகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல்.

இதனால் தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிக மக்கள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள மீண்டும் சலுகையைத் தொடங்க ஆரம்பித்துள்ளது. அதாவது சமீபத்தில் ஒரு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது ஜியோ நிறுவனம். இப்போது அந்த திட்டத்தைப் பார்க்கலாம்.

மலிவு விலையில் புதிய சாதனத்தை கொண்டுவரும் ஜியோ.. அது என்ன?

ஜியோ நிறுவனம் சமீபத்தில் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Rs 198 Prepaid Recharge Plan) தான் கொண்டுவந்தது. குறிப்பாகத் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திடடம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

அதன்படி ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்குகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோகிளவுட் (JioCloud), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio partners with Meta to launch affordable VR headset in India: Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X