இந்திய பணக்காரர் பட்டியலில் 12வது ஆண்டாக அம்பானி முதலிடம்: ஜியோவால் 4.1 பில்லியன் டாலர் சேர்ப்பு.!

|

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகின்றது. இந்தாண்டு இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. ஜியோ தொலைத் தொடர்பு துறையால் அம்பானிக்கு இந்தாண்டு 4.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்க்க முடிந்துள்ளது.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

இந்தியாவில் ஜியோ நிறுவனம் தற்போது, அசுர வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதலிடத்திலும் இருக்கின்றது. நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாகவும் ஜியோ நிறுவனம் இருக்கின்றது. மேலும், 340 பில்லியன் சந்தார்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.!வாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.!

4.1 பில்லியன் டாலர் சேர்க்க உதவிய ஜியோ

4.1 பில்லியன் டாலர் சேர்க்க உதவிய ஜியோ

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு வயது 3தான் ஆகிறது. இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய மொபைல் கேரியர்களாக ஜியோ ஆனதால், முகேஷ் அம்பானிக்கு நிகர மதிப்பில் 4.1 பில்லியன் அமெரிக்கா டாலர்களை சேர்க்க உதவியுள்ளது. இதை போர்ப்ஸ் பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'! ராஜ தந்திரம்-பலே ஐடியா.!பிற நெட்வொர்க்கிற்கான அழைப்பு கட்டணத்தை குறைக்க புதிய ஜியோ 'டாப் அப்'! ராஜ தந்திரம்-பலே ஐடியா.!

12வது ஆண்டாக முகேஷ் முதலிடம்

12வது ஆண்டாக முகேஷ் முதலிடம்

இந்திய பணக்கார்கள் பட்டியலை வெளியிட்டு வரும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தாண்டும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருக்கும் அம்பானி இந்தாண்டும் 12வது முறையாக முதலிடத்தில் நீடிக்கின்றார்.

கவுதம் அதானிக்கு 2ம் இடம்

கவுதம் அதானிக்கு 2ம் இடம்

உள் கட்டமைப்பு அதிபர் கவுதம் அதானி 8 இடங்கள் முன்னேறி தற்போது 2ம் இடம் பிடித்துள்ளார். 15.7 பில்லியன் அமெரிக்கா டாலர் நிகர மதிப்பு. ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்க வேலையை ஜூன் மாதம் பெற்றார். இதைத்தொடர்ந்து 9 ஆண்டு காத்திருப்புகளுக்கு பிறகு இவர் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.!தீபாவளி ஆப்பர்: 4கே ஓஎல்இடி டிவிக்கு ரூ.30000 தள்ளுபடி வழங்கி அதிரவிட்ட சோனி.!

இந்துஜா சகோதரர்கள்

இந்துஜா சகோதரர்கள்

இந்தாண்டு நிகர மதிப்பு 15.6 பில்லியன் டாலர்களுடன் 3வதுத்திலும், பல்லோன்ஜி மிஸ்திரி 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர். 4 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்வால், வங்கியாளர் உதய் கோட்டக்கை முதல் முறையாக முதல் 5 இடத்தில் சேர்ந்துள்ளார். கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் கடந்த ஆண்டில் 39 சதவீதம் உயர்ந்தன.

இந்திய பணக்கார்கள் பட்டியல்

இந்திய பணக்கார்கள் பட்டியல்

1. முகேஷ் அம்பானி: 51.4 பில்லியன் அமெரிக்க டாலர்

2. கவுதம் அதானி: அமெரிக்க டாலர் 15.7 பில்லியன்

3. இந்துஜா சகோதரர்கள்: அமெரிக்க டாலர் 15.6 பில்லியன்

4. பல்லோன்ஜி மிஸ்திரி: 15 பில்லியன் அமெரிக்க டாலர்

5. உதய் கோடக்: USD14.8 பில்லியன்

போர்ப்ஸ் பத்திரிக்கை அறிக்கை

போர்ப்ஸ் பத்திரிக்கை அறிக்கை

6. சிவன் நாடார்: USD14.4 பில்லியன்

7. ராதாகிஷன் தமானி: அமெரிக்க டாலர் 14.3 பில்லியன்

8. கோத்ரேஜ் குடும்பம்: அமெரிக்க டாலர் 12 பில்லியன்

9. லட்சுமி மிட்டல்: 10.5 பில்லியன் அமெரிக்க டாலர்

10. குமார் பிர்லா: அமெரிக்க டாலர் 9.6 பில்லியன்

இவ்வாறு போர்ப்ஸ் பத்திரிக்கை தகவலில் வெளியிட்டுள்ளது. 100 பேர் பட்டியலில் இளைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Best Mobiles in India

English summary
Jio woner mukesh ambani tops forbes india rich list 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X