Home
News

டாடி.. கொஞ்சம் ஓரம்போங்க.. Jio கம்பெனி என்து சொல்ற அளவுக்கு.. Smart TV சந்தைக்கு குறிவச்ச குட்டி அம்பானி!

சரியாக சொல்ல வேண்டுமென்றால்.. ரூ.1745000 கோடி மதிப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டி ஆள்வது அவ்வளவு சுலமபான காரியம் அல்ல.. அதை திறம்பட கையாளும் முகேஷ் அம்பானியையே ஓரங்கட்டும் அளவிலான புதுப்புது ஐடியாக்களை கட்டவிழ்த்து விடுகிறார், அவரது மகனான ஆகாஷ் அம்பானி!

ஆகாஷ் அம்பானியின் வழிநடத்தலின் கீழ், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மென்பொருள் அடிப்படையில் பெரிய அளவிலான முன்னேற்றங்களை கண்டுள்ளது. சமீபத்தில் ஐஐடி மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் பேசும் போது, இந்திய பயனர்களை மையமாக கொண்டு சாட்ஜிபிடிக்கு (ChatGPT) போட்டியாக பாரத்ஜிபிடி-ஐ (Bharat GPT) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதை உறுதிப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Smart TV சந்தைக்கு குறிவச்ச குட்டி அம்பானி!

இதற்கிடையில் ஆகாஷ் அம்பானியின் பொறுப்பின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஸ்மார்ட் டிவி சந்தைக்குள்ளும் காலடி எடுத்து வைக்க உள்ளது. ஜியோ நிறுவனமானது ஸ்மார்ட் டிவிகளுக்கான சொந்தமாக ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை (Jio's own Smart TV Operating System) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆகாஷ் அம்பானியே தெரிவித்துள்ளார்.

"நாங்கள் சில காலமாக ஸ்மார்ட் டிவிகளுக்கான எங்களுடைய சொந்த ஓஎஸ்-இல் பணியாற்றி வருகிறோம், அதை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி நாங்கள் விரிவாக யோசித்து வருகிறோம்" என்று ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார். ஏற்கனவே மீடியா (Media), வர்த்தகம் (Commerce), தகவல் தொடர்பு (Communication) மற்றும் டிவைஸ்கள் (Devices) ஆகிய துறைகளில் ஜியோ நிறுவனமானது ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறது.

Smart TV சந்தைக்கு குறிவச்ச குட்டி அம்பானி!

இதற்கிடையில் புதிய டிவி ஓஎஸ்-ன் வருகையானது ஜியோ நிறுவனத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கூடவே முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி "அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை!" என்பதையும் நிரூபித்து வருகிறார் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்!

பாரத்ஜிபிடி-ஐ உருவாக்க ஐஐடி பாம்பேவின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையை சேர்ந்த பேராசிரியர் ஆன கணேஷ் ராமகிருஷ்ணனுடன் ஜியோ நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்காக ஜெனரேட்டிவ் ப்ரீடிரெய்ன்ட் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் லார்ஜ் லேங்குவேஜ் மாடல்களின் திறன்களை பயன்படுத்தவும் ஜியோ திட்டமிட்டுள்ளது.

Smart TV சந்தைக்கு குறிவச்ச குட்டி அம்பானி!

சமீபத்தில், சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனமானது சாட்ஜிபிடி-க்கு எதிராக தனது கூகுள் ஜெமினியை (Google Gemini) களமிறக்கி விட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூகுள் ஜெமினி என்பது கூகுளின் சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலாகும். இது நானோ, ப்ரோ மற்றும் அல்ட்ரா என மொத்தம் 3 வெர்ஷன்களின்கீழ் அணுக கிடைக்கும்; ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வேலைகளை செய்ய உதவும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் சில ஆராய்ச்சியாளர்கள், பெரும்பாலான பணிகளின் அடிப்படையில் கூகுள் ஜெமினி ஆனது ஓப்பன்ஏஐ-யின் ஜிபிடி 3.5 டர்போ லார்ஜ் லேங்குவேஜ் மாடல் அளவிற்கு திறமையாக இல்லை, சற்றே பின்தங்கித்தான் இருக்கிறது என்று கூறுகின்றனர்.

கூகுளுக்கே இந்த நிலைமை என்றால் பார்த்ஜிபிடி எல்லாம் என்ன ஆகுமோ என்கிற கேள்வி குறியும் இங்கே உருவாகிறது. ஆகாஷ் அம்பானியின் பார்த்ஜிபிடி யோசனை வெற்றி அடையுமா? பார்த்ஜிபிடி ஆனது சாட்ஜிப்பிடி-க்கு போட்டியளிக்குமா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை காலம் தான் சொல்ல வேண்டும்!

ரிலையன்ஸ் ஜியோ தொடர்பான மற்ற முக்கியமான செய்திகளை பொறுத்தவரை, 2024 நியூ இயர் ஆஃபர் ஆக ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது 24 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இது 365 நாட்கள் என்கிற வேலிட்டியை வழங்கும். ஆனால் தற்போது இது 389 நாட்கள் என்கிற மொத்த வேலிடிட்டியை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Own Smart TV OS Mukesh Ambani Son Akash Ambani New Master Plan To Grow Reliance Company
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X