அறக்க பறக்க ரீசார்ஜ்.. ரூ.100 முதல் ஆரம்பம்.. ஜியோஹாட்ஸ்டார்.. பிரைம் வீடியோ.. நெட்பிளிக்ஸ்.. டாப் OTT சந்தா!
ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio Prepaid Recharge) மூலம் இலவச ஓடிடி சந்தாவை (Free OTT Subscriptions) விரும்பும் கஸ்டமர்களுக்கு பிரீமியம் ஓடிடி ஆப்ஷன்களில் மூன்று திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் நெட்பிளிக்ஸ் (Netflix) போன்ற ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. ரூ.100 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. நெட்பிளிக்ஸ் திட்டமே அதிக விலைக்கு கிடைக்கிறது. ஆரம்ப விலையில் இருந்து கிடைக்கும் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 100 திட்ட விவரங்கள் (Jio Rs 100 Plan Details): ஜியோ கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலைக்கு கிடைக்கும் பிரீமியம் ஓடிடி சந்தாவாக ஜியோஹாட்ஸ்டார் இருக்கிறது. ஏனென்றால், ரூ.100 விலையிலான டேட்டா திட்டத்திலேயே 3 மாதங்களுக்கான சந்தா கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதில் 5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதை தவிர வேறு சலுகைகள் கிடைக்காது.

ஜியோ ரூ 1029 திட்ட விவரங்கள் (Jio Rs 1029 Plan Details): அமேசான் பிரைம் வீடியோ சந்தா, இந்த திட்டத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த திட்டத்தில் வெறும் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றம் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கிடைக்கிறது. இதில் அமேசான் பிரைம் லைட் சந்தா கிடைக்கிறது.
இதை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த வேலிடிட்டி முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி லிமிட்டுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கிடைக்கிறது.
இந்த சலுகைகள் போக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை கூடுதலாக பெற்று கொள்ளலாம். இந்த சலுகையானது, ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் கீழ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதை ஒரு முறை மட்டுமே கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும். ஆகவே, இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் லைட் சந்தா மட்டுமல்லாமல், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் கிடைக்கிறது.
ஜியோ ரூ 1299 திட்ட விவரங்கள் (Jio Rs 1299 Plan Details): ஜியோ கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் சாந்தாவுடன் 2 திட்டம் கிடைக்கிறது. ஆனால், ஆரம்ப விலைக்கு கிடைக்கும் திட்டங்களை மட்டுமே இப்போது பார்த்து வருகிறோம். ஆகவே, இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இதில் மூன்று மாதங்களுக்கான நெட்பிளிக்ஸ் சந்தாவை பெற்று கொள்ளலாம்.
இதுபோக முந்தைய திட்டத்தில் கிடைத்ததை போலவே வாய்ஸ் கால்கள் (Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் சந்தாவுக்கு அடுத்தபடியாக ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவும் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.
மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் தினசரி லிமிட்டுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டங்களுக்கு ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகைகளும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








