ஜியோ VS ஏர்டெல்.. ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?
ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளன. அதுவும் இந்த இரண்டு நிறுவனங்களும் நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளன. இதில் எந்த நிறுவனம் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிக நன்மைகளை வழங்குகிறது? எதை தேர்வு செய்வது நல்லது? என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 899 prepaid plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) போன்ற சலுகைகளும் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் கிடைக்காது.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் .
மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
எது சிறந்தது? ஏர்டெல் நிறுவனம் குறைந்த டேட்டா மற்றும் வேலிடிட்டி வழங்குகிறது. அதுவும் ஏர்டெல் திட்டத்தில் ஓடிடி நன்மைகள் இல்லை. ஆனால் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி, அதிக டேட்டா, 90 நாட்கள் வேலிடிட்டி என்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஜியோவின் ரூ.899 திட்டம் தான் சிறந்தது.


Click it and Unblock the Notifications