அட தர முடியாதுங்க.. Airtel, Vodafone-க்கு சேர்ந்தாப்புல Jio வச்ச ஆப்பு.. அம்பானியா கொக்கா!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், அதன் முக்கிய போட்டியாளர்களான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களுக்குமே சேர்ந்தாற்போல ஆப்பு ஒன்றை வைத்துள்ளது!
இந்தியாவில் உள்ள டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு இடையேயான இன்டர்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் பகிர்வு (Inter-band Spectrum Sharing) என்கிற யோசனையை ரிலையன்ஸ் ஜியோ எதிர்த்துள்ளது. ஜியோவின் கூற்றுப்படி, இந்த இன்டர்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் பகிர்வானது அரசாங்கத்தின் வருவாயை பாதிக்கும் மற்றும் சந்தையில் உள்ள போட்டிதன்மையையும் குறைக்கும்.

எதிர்க்கும் ஜியோ... ஆதரிக்கும் ஏர்டெல், வோடாபோன்!
இன்டர்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் பகிர்வு என்கிற யோசனையை ரிலையன்ஸ் ஜியோ எதிர்க்கும் மறுகையில் பார்தி ஏர்டெல்லும், வோடபோன் ஐடியாவும் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஏனென்றால், எதிர்கால ஏலங்களில் விற்கப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணங்களை (Spectrum Usage Charges - SUC) அரசாங்கம் நீக்கியுள்ளது.
இனிமேல் குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்தால் போதும்!
ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் நடக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கத்திடம் இருந்து கூடுதல் அலைக்கற்றையை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. வெறுமனே மற்ற நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்தால் போதும். இது டெலிகாம் நிறுவனங்களின் செலவை குறைக்கலாம்!
வாய்விட்டு கேட்கும் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா!
ஆப்ரேட்டர்களுக்கு இடையேயான இன்டர்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் பகிர்வென்பது ஒரு நல்ல யோசனை ஆகும் என்றும், இந்த நடவடிக்கை ஸ்பெக்ட்ரல் செயல்திறனை (Spectral efficiency) மேம்படுத்தும், அதே சமயம் நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவைகளின் (Quality of services) தரத்தையும் மேம்படுத்தும் என்றும் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா வாதிட்டுள்ளன.
நமக்கெல்லாம் நல்லது தான்.. ஆனால் ஜியோ ஒற்றுக்கொள்ள வேண்டுமே?
உண்மையிலேயே இன்டர்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் பகிர்வென்பது ஒரு நல்ல யோசனை தான். ஏனென்றால் இது நிச்சயமாக டெலிகாம் நிறுவனங்களின் சுமையை குறைக்கும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நுகர்வோரக்ளுக்கு நெட்வொர்க் சேவையை வேகமாகவும், சிறப்பாகவும் வெளியிட அனுமதிக்கும். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ இந்த யோசனைக்கு எதிராக நிற்கிறதே!
ஜியோ இந்த யோசனையை எதிர்க்க முக்கிய காரணம் என்ன?
இன்டர்-பேண்ட் ஸ்பெக்ட்ரமை பகிர்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட டெலிகாம் ஆபரேட்டர், ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது ஊரில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்புகள் குறையும். மேலும் இந்த யோசனை இரண்டு வெவ்வேறு டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு இடையேயான போட்டித்தன்மையையும் கூட தளர்த்தும் என்று ரிலையன்ஸ் ஜியோ நம்புகிறது.
இது எல்லாவற்றிற்கும் காரணம் டிராய் தான்!
ஸ்பெக்ட்ரம் குத்தகை மற்றும் ஸ்பெக்ட்ரம் பகிர்வு குறித்த, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI - Telecom Regulatory Authority of India) ஆலோசனை கட்டுரைக்கு பதில் அளிக்கும் பொருட்டே ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் தத்தம் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் பகிர்வுடன் சேர்த்து டெலிகாம் நிறுவனங்களுக் கு இடையிலான உள்கட்டமைப்பை பகிர்வு (Infrastructure Sharing ) குறித்தும் டிராய் கருத்துகளை கேட்டுள்ளது!


Click it and Unblock the Notifications








