இனி கேபிள் டிவி எதுக்கு? ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் அள்ளி கொடுக்கும் Jio.. இதோ முழு விவரம்..
ஜியோ (jio) நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று உங்கள் வீடுகளில் உள்ள கேபிள் டிவி கனெக்ஷனை கட் செய்ய தூண்டினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதென்ன திட்டம் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid plan) ஆனது பிரபலமான ஓடிடி தளங்களான சோனி லைவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய இரண்டையுமே இலவசமாக வழங்குகிறது. கூடவே ஜியோ டிவி (Jio TV) ஆப்வசதிக்கான அணுகல்களையும் வழங்குகிறது. எனவே டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க வழிவகுக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட் பிளானை (Entertainment Plan) நீங்கள் தேர்வு செய்ய நினைத்தால் ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

அதேபோல் ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1049 prepaid plan)ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம்.மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ கிளவுட் (JioCloud), உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ஜியோ ரூ.1049 திட்டத்தில் வழங்கப்படுகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஒருவேளை ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வேண்டும் என நினைக்கும் பயனர்கள் ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 84 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதாவது தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற சலுகைகளை ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.


Click it and Unblock the Notifications