BSNL கதையை முடித்த அம்பானி.. மாதாந்திரம் ரூ.158 போதும்.. 336 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. Jio கஸ்டமர்கள் குஷி!
ஜியோ சிம் கார்டை பல வருடங்களாக வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு கூட ஜியோ வேல்யூ திட்டங்களை (Jio Value Plan) பற்றி பெரிதும் தெரிந்திருக்காது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலவே அடிமட்ட விலைக்கு வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் சலுகை கொடுப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவையும கொடுக்கிறது இந்த வேல்யூ ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தின் சலுகைகளை பார்த்துவிட்டால், அடுத்தது இதுதான் ரீசார்ஜ் என்று முடிவை கூட நீங்கள் எடுக்கலாம். அப்படி என்ன இருக்கு?
ஜியோவில் ஒரு மாதத்துக்கு ரீசார்ஜ் செய்தால் குறைந்தது, ரூ.189 மதிப்பிலான வேல்யூ திட்டத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். ஏனென்றால், இதைவிட மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் கொண்ட திட்டம் அந்த நிறுவனத்திடம் கிடையாது. ஆனால், அதுவே வருடம் முழுவதும் ரீசார்ஜ் செய்தால், மாதத்துக்கு வெறும் ரூ.158 செலவில் வாய்ஸ் கால்களை பெற்று கொள்ளலாம்.

அதாவது, ஜியோ நிறுவனமானது, ரூ 1899 மதிப்பிலான வேல்யூ திட்டத்தை கொடுக்கிறது. இந்த திட்டத்தில் 12 மாதங்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, மாத செலவை கணக்கிட்டு பார்த்தால் வெறும் ரூ.158 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. ஆகவே, பிஎஸ்என்எல் நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படி இந்த ப்ரீபெய்ட் திட்டம் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது.
ஜியோ ரூ 1899 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1899 Yearly Prepaid Plan): இந்த திட்டம் வேல்யூ சலுகையின் கீழ் கிடைக்கிறது. ஆகவே, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் குறைவாக மட்டுமே கிடைக்கும். வாய்ஸ் கால்கள் சலுகைகளுக்கு குறையே இருக்காது. அன்லிமிடெட்டாக கிடைக்கும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
அதாவது, மாதத்துக்கு 28 நாட்கள் கணக்கில் 12 மாதங்களுக்கும் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த மலிவு விலை வருடாந்திர திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகளை கஸ்டமர்கள பெற்று கொள்ளலாம். இது மட்டுமே கணக்கில்லாமல் கிடைக்கும். மற்ற சலுகைகள் அப்படி கிடையாது.
ஆகவே, டேட்டா சலுகையானது, மொத்தமாகவே 24 ஜிபி மட்டுமே கிடைக்கும். இதற்கு பிறகு டேட்டா வேண்டுமானால், டேட்டா வவுச்சர்களுக்கு செல்ல வேண்டும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் இந்த வேல்யூ திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், 336 நாட்களுக்கு சிம் ஆக்டிவ் கிடைக்கும். எஸ்எம்எஸ் சலுகையும் குறைவாக மட்டுமே கிடைக்கும்.
ரீசார்ஜ் செய்த உடனே கஸ்டமர்களுக்கு 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டுவிடும். இந்த மொத்த எஸ்எம்எஸ்களை தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அனுப்பி கொள்ளலாம். இந்த சலுகைகளே இந்த வருடாந்திர வேல்யூ திட்டத்தில் கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் வருடம் முழுவதும் வேண்டும், வேறு சலுகைகள் வேண்டாம் என்றால், இதை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.
இந்த திட்டம் நல்ல லாபம் என்பதை நீங்கள் ரூ 189 மதிப்பிலான திட்டத்தின் சலுகைகளை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். இந்த ரூ 189 திட்டமும் வேல்யூ சலுகையில் கீழ் கிடைக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கிறது. 300 எம்எம்எஸ் சலுகையும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் இருக்கிறது.
இந்த திட்டத்தை நீங்கள் மாதம் மாதம் ரீசார்ஜ் செய்தால், 12 மாதங்களுக்கு ரூ.2,268 செலவாகி இருக்கும். ஆனால், முதலில் பார்த்த வருடாந்திர வேல்யூ திட்டத்தை ரீசார்ஜ் செய்திருந்தால், இந்த விலை ரூ.158ஆக இருக்கும். ஆகவே, உங்களுக்கு ரூ.369 பணம் மிஞ்சமாகிறது. செகண்டரி சிம் கார்டு அல்லது டேட்டா தேவைப்படாத சிம் கார்டுகளுக்கு இந்த திட்டம் பெஸ்ட் தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








