Home
News

இனி Netflix-க்கு தனியாக பணம் கட்ட வேண்டாம்! இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களே போதும்.. அன்லிமிடெட் சலுகைகள்..

நாட்டில் ஜியோ (jio) ப்ரீபெய்ட் பயனர்கள் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யத் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் பட்ஜெட் விலையில் ஓடிடி நன்மைகளுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது ஜியோ. எனவே தான் இதுபோன்ற ஓடிடி திட்டங்களைப் பலர் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா தரும் இரண்டு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இனி Netflix-க்கு தனியாக பணம் கட்ட வேண்டாம்!

ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இதில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.

இனி Netflix-க்கு தனியாக பணம் கட்ட வேண்டாம்!

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஜியோவின் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம்.

மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.1299 மற்றும் ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Jio offers unlimited offers with Netflix subscription on Rs.1299 and Rs.1799 prepaid plans: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X