ஒரே ரீசார்ஜ்.. ஒரு வருஷத்துக்கு கவலை இருக்காது.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. வாரி வழங்கும் Jio..
ஜியோ (Jio) நிறுவனம் குறைந்த அளவில் தான் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதாவது இந்நிறுவனம் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்திய பிறகு பல முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கவிட்டது. அதேசமயம் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று உயர்வான விலையில் தான் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். இப்போது ஜியோ 365 நாள் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3599 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. அதேசமயம் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என நிறுவனம் கூறியுள்ளது.
இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஜியோ நிறுவனம் இதேபோன்று இன்னொரு திட்டத்தையும் வைத்துள்ளது. அந்த திட்டத்தைப் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio rs 3999 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். இதுதவிர ஃஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகளை இந்த
திட்டத்தில் பெறமுடியும்
அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும். ஒருவேளை உங்களுக்கு ஓடிடி சலுகையுடன் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டும் என்றால் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid recharge plan) 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஜியோ ரூ.1029 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








