1 வருடத்திற்கு கவலையே இருக்காது: Jio-வின் 2 டேட்டா ஆட்-ஆன் பேக்-எக்கச்சக்க நன்மைகள்.!
ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. அதேபோல் இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட அதிக சலுகையை வழங்குகிறது என்றே கூறலாம்.

5ஜி சேவை
அதேபோல் ஜியோ நிறுவனம் தற்போது சில இடங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் அனைத்து இடங்களிலும் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஒரு வருடத்திற்குச் செயல்படும் இரண்டு டேட்டா ஆட்-ஆன் பேக்குகளை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களில் அதிக நன்மைகள் உள்ளது.

அதாவது அதிக வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் இரண்டு திட்டங்கள். குறிப்பாக ரூ.2879 மற்றும் ரூ.2998 விலைகளில் கிடைக்கிறது ஆட்-ஆன் பேக்குகள். இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.2879 திட்டம்
ஜியோ வழங்கும் ரூ.2879 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 730ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் வெறும் டேட்டா நன்மை மட்டுமே உள்ளது. அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுக்கு வேறு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஜியோ ரூ.2998 திட்டம்
ஒருவேளை 2ஜிபி டேட்டா உங்களுக்கு குறைவாக தெரிந்தால் தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கும் இந்த ஜியோ ரூ.2998 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. அதாவது இந்த ஜியோ ரூ.2998 திட்டம் ஆனது மொத்தமாக 912.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டமும் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்காது.
குறிப்பாக அதிக நாட்கள் வேலிடிட்டி உடன் டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த இரண்டு ஆட்-ஆன் பேக்குகளை தேர்வு செய்வது நல்லது. மேலும் குறைந்த விலையில் இந்நிறுவனம் வழங்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. பின்பு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளது. பின்பு ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications