Home
News

Jio பயனர்கள் காட்டில் மழைதான்: மலிவு விலையில் அன்லிமிடெட் டேட்டா, காலிங் ரீசார்ஜ் பிளான்கள்!

அதிக வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக Jio இருக்கிறது. பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டிப்போட முடியாமல் திணறி வருகிறது. இதற்கு காரணம், ஜியோ பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட மலிவு விலையில் கூடுதல் அம்சங்களோடு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவது தான். அதன்படி ஜியோ ரூ.500க்கு கீழ் வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை பார்க்கலாம்.

வரம்பற்ற அழைப்பு, தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா

வரம்பற்ற அழைப்பு, தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா

ரிலையன்ஸ் ஜியோ ரூ.500க்கு கீழ் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில் OTT சந்தா அணுகல், வரம்பற்ற அழைப்பு, தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா என பல நன்மைகள் வழங்குகிறது.

ரூ.500க்கு கீழான ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறித்து பார்க்கையில், அது ரூ.249, ரூ.299 மற்றும் ரூ.533 என்ற விலையில் கிடைக்கிறது.

ரூ.249 ரீசார்ஜ் திட்டம்

ரூ.249 ரீசார்ஜ் திட்டம்

ரூ.249 ரீசார்ஜ் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தம் 46ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அதிவேக டேட்டா வேகம் வரம்பு முடிந்ததும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

கூடுதலாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது.

இந்த திட்டமானது மொத்தம் 23 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.299 ரீசார்ஜ் திட்டம்

ரூ.299 ரீசார்ஜ் திட்டம்

அதிக வேலிடிட்டி நாட்கள் விரும்பும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ரூ.299 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது.

இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா என மொத்தம் 56 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த திட்டமானது வரம்பற்ற குரலழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட பல ஜியோ பயன்பாடுகளுக்கான நன்மைகள் வழங்கப்படுகிறது.

ரூ.533 ரீசார்ஜ் திட்டம்

ரூ.533 ரீசார்ஜ் திட்டம்

ரூ.533 ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா என மொத்தம் 112 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

இந்த திட்டமானது வரம்பற்ற குரலழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டமானது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

தினசரி 1.5 ஜிபி டேட்டா

தினசரி 1.5 ஜிபி டேட்டா

அதேபோல் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கையில் இதன் விலை ரூ.119, ரூ.199, ரூ.239, ரூ.259 மற்றும் ரூ.479 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.119 திட்டமானது 14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.199 ரீசார்ஜ் திட்டமானது 23 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

தினசரி 1.5 ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகள்

ரூ.239 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியையும், ரூ.259 ரீசார்ஜ் திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டியையும், ரூ.479 ரீசார்ஜ் திட்டமானது 56 வேலிடிட்டியையும் கொண்டிருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களும் தினசரி 1.5 ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற குரலழைப்புகள் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது.

தினசரி 1 ஜிபி டேட்டா

ரூ.149 ரீசார்ஜ் திட்டமானது 20 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டம் தினசரி 1 ஜிபி டேட்டா என மொத்தம் 20 ஜிபி டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகிறது.

தினசரி 1 ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற குரலழைப்பு

அதேபோல் ரூ.179 ரீசார்ஜ் திட்டமானது 24 நாட்கள் வேலிடிட்டியையும், ரூ.209 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியையும் கொண்டிருக்கிறது. இந்த அனைத்து திட்டங்களும் தினசரி 1 ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio Offers Recharge Plans under Rs.500 with Unlimited daily Data, Calling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X