Jio பயனர்களே.. சிந்தாம சிதறாம 90 நாட்களை அள்ளுங்க! 180 ஜிபி டேட்டா உடன் மலிவு விலை பிளான்!

|

Jio ப்ரீபெய்ட் திட்டங்களை மொத்தம் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரும் வழங்கப்படுகிறது.

Reliance Jio முழுமையான மாதாந்திர திட்டங்களை அறிவித்துள்ளது. வருடாந்திர திட்டங்களை தேர்ந்தெடுக்க விருப்பமில்லாத வாடிக்கையாளர்கள் இந்த 90 நாட்கள் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக இதுபோன்று 3 மாத முழுமையான பிளானை தேர்ந்தெடுக்கலாம்.

Jio பயனர்களே.. சிந்தாம சிதறாம 90 நாட்களை அள்ளுங்க! மலிவு விலை பிளான்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முழுமையான 3 மாத பிளானை அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.749 ஆகும். இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரலழைப்பு மற்றும் டேட்டா பலன்களை வழங்குகிறது.

ஜியோ ரூ.749 திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா என மொத்தம் 180 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஜியோ அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தில் வழங்குகிறது. தினசரி வழங்கப்படும் 2 ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். ஜியோ பயன்பாடுகளின் நன்மைகள் குறித்து பார்க்கையில், அது JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்டவைகள் ஆகும்.

ஜியோ வெல்கம் ஆஃபரும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஜியோ வெல்கம் ஆஃபர் என்பது அதன் 5ஜி சேவையை பயன்படுத்த அனுமதிக்கும் சலுகை ஆகும். ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபர் இன் கீழ் வரம்பற்ற 5G டேட்டாவை பயனர்கள் அனுபவிக்கலாம். ஆனால் இந்த சேவையை பயன்படுத்த நீங்கள் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதியில் இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

டெல்லி, மும்பை, நாத்துவாரா, வாரணாசி உள்ளிட்ட 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கி இருக்கிறது. 5G சேவையில் ஜியோ மற்றும் ஏர்டெல் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கும் என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளது. அதன்படி 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது.

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 2 மாதங்களுக்குள் 50 இந்திய நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து 50 இந்திய நகரங்களில் தங்களது 5ஜி சேவையை நிறுவனங்கள் விரிவுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மட்டுமே வழங்குகின்றன. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் 2024 ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ டிசம்பர் 2023க்குள் குறிப்பிடத்தக்க இந்திய நகரங்களை சென்றடைய இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jio Offers Prepaid Plan with Full of 90 Days Validity at Rs.749! 180GB Data, Unlimited Call Benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X