Home
News

யாரு சாமி நீ.. அனைத்து ஓடிடியும் இலவசம்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசத்தும் ஜியோ..

ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஓடிடி சந்தா வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இந்த ஓடிடி ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

அதாவது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் பாஸ்வேர்டு பகிர்வதை தடை செய்துள்ளன. மறுபக்கம் அமேசான் பிரைம் கட்டணம் கூட அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் பல ஓடிடி சந்தாக்களை இலவசமாக வழங்கி வருகிறது அதுவும் பட்ஜெட் விலையில். சரி இப்போது விஷயத்துக்கு வரும் இலவச ஓடிடி உடன் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அனைத்து ஓடிடியும் இலவசம்.. தினமும் 2ஜிபி டேட்டா.. அசத்தும் ஜியோ..

ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 398 Plan) ஆனது மொத்தமாக 56ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் ஒடிடி சேவைகளுக்கான இலவச சந்தாவை வழங்குகிறது இந்த ரூ.398 திட்டம். அதன்படி இந்த திட்டம் மூலம் சோனி லிவ், ZEE5, லியாங்கேட் ப்ளே, ஜியோ சினிமா பிரீமியம், டிஸ்கவரி+, சன் என்எக்ஸ்டி, Kanchha Lannka, பிளானட் மராத்தி, சௌபால், Hoichoi, டாக்குபே, எபிக் ஆன், ஜியோடிவி ஆப் உள்ளிட்ட ஆப்ஸ்களை நாம் பயன்படுத்த முடியும்.

அனைத்து ஓடிடியும் இலவசம்.. தினமும் 2ஜிபி டேட்டா.. அசத்தும் ஜியோ..

ஜியோ ரூ.857 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 857 Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம்.

இதுதவிர 84 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.857 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இதில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற சேவைகளையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ 1099 ப்ரீபெய்ட் திட்டமானது (Jio Rs 1099 Plan Details) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச நெட்பிளிக்ஸ் (Netflix Mobile) சந்தா, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற சேவைகளையும் இதில் பயன்படுத்த முடியும்.

அனைத்து ஓடிடியும் இலவசம்.. தினமும் 2ஜிபி டேட்டா.. அசத்தும் ஜியோ..

ஜியோ நிறுவனத்தின் ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம்(jio rs 1198 plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் 18ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 186ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+Hotstar Mobile), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) மற்றும் சன் நெக்ஸ்ட் (Sun NXT) , கன்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சவ்பால் (Chaupal), டாகுபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON), ஹோய்சோய் (Hoichoi), ஜியோ டிவி (JioTV) ஆகிய தளங்களின் சந்தா இதில் கிடைக்கும்.

ஜியோ ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3227 Recharge Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஜியோ ரூ.3227 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற பல நன்மைகள் இதில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio offers free Netflix Prime Hotstar on select recharge plans check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X