மீண்டும் இலவசம்.. மாசத்துக்கு ரூ.175 போதும்.. பல வீடுகளின் கேபிள் TV கனெக்ஷனை கட் செய்த Jio அம்பானி!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்திற்கு இலவசங்களை வாரி வழங்குவது ஒன்றும் புதிய காரியம் அல்ல. அறிமுகமான நாளில் இருந்தே, என்னென்ன நன்மைகளை அல்லது சேவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் கஸ்டமர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை நன்கு அறிந்து.. அதன்படி புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதையும்; ஏற்கனவே உள்ள திட்டங்களை திருத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டிற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) அறிமுகத்திற்கு பின்னர் இந்த சேவைக்கென பிரத்யேக சந்தா திட்டங்கள் (Subscription Plans) அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகள் தொடங்கியதும், பல ஜியோ திட்டங்களில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கிறது. அந்த வரிசையில், கேபிள் டிவி கனெக்ஷன்களை கட் செய்யும் "ஜியோடிவி பிரீமியம்" சந்தாவை (JioTV Premium Subscription) இலவசமாக வழங்கும் 2 திட்டங்கள் ஜியோவிடம் உள்ளன.

அதென்ன திட்டங்கள் என்பதை பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன், உண்மையில் ஜியோடிவி பிரீமியம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். பெயர் குறிப்பிடுவது போலவே, ஜியோடிவி பிரீமியம் சந்தா என்பது ஜியோடிவி ஆப்பிற்கான ஒரு சந்தாவாகும். ஜியோடிவி ஆப்பில் உள்ள கன்டென்ட்களை பார்க்க 2 வழிகள் உள்ளன. முதலாவதாக - ஜியோடிவி ஆப்பின் ப்ரீ பிளாட்பார்ம் (Free Platform) உள்ளது; பின்னர் - பிரீமியம் பிளாட்பார்ம் (Premium Platform) உள்ளது.
பிரீமியம் பிளாட்பார்ம் ஆனது பல ஓடிடி தளங்களில் உள்ள கன்டென்ட்களை தொகுக்கிறது. இது அடிப்படையில் ஒருஓடிடி திரட்டல் தளமாகும் (OTT aggregation platform). ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் நீங்கள் இலவச ஜியோடிவி பிரீமியம் சந்தாவை பெற முடியும். ஜியோடிவி பிரீமியம் சந்தாவுடன் தொகுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் - ரூ.445 மற்றும் ரூ.175 திட்டங்கள் ஆகும். முதலில் உள்ள ரூ.445 திட்டமானது (Jio Rs 445 Plan) 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.
நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது 50ஜிபி இலவச ஜியோஏஐ கிளவுட் ஸ்டோரேஜையும் வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கான இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இலவசமாக கிடைக்கும். மேலும் இது ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி சலுகையின் ஒரு பகுதியாகவும் இருக்கும். அதாவது வரம்பற்ற 5ஜி டேட்டா சலுகை கிடைக்கும்.
ரூ.445-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள், ஜியோடிவி பிரீமியம் சந்தாவின் கீழ் பின்வரும் தளங்களுக்கான அணுகல்களை பெறுவார்கள் - சோனி லைவ், ஜீ5, லயன்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால், ஃபேன்கோட் மற்றும் ஹோய்சோய். மறுகையில் உள்ள ரூ.175 திட்டத்தை (Jio Rs 175 Plan) பொறுத்தவரை இதுவும் 28 நாட்கள் செல்லுபடியாகும். ஆனால் இதுவொரு டேட்டா ஒன்லி பிளான் ஆகும்.
இதன்கீழும் சோனி லைவ், ஜீ5, லயன்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் நெக்ஸ்ட், காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால், ஃபேன்கோட் மற்றும் ஹோய்சோய் ஆகிய ஓடிடி நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்தின் மற்ற நன்மைகளை பொறுத்தவரை இது 10ஜிபி டேட்டா உடன் வருகிறது. FUP வரம்பை தாண்டிய பின்னர், அதாவது 10ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ரிலையன்ஸ் ஜியோ சேவையில் இருந்து ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்த இரண்டு திட்டங்களை தவிர்த்து வேறு எந்த திட்டங்களும் வழங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








