Home
News

Jio-வின் இந்த ரீசார்ஜ் பிளானில் இலவச கேமிங் சந்தா.. அன்லிமிடெட் சலுகைகள்.. இதோ முழு விவரம்

ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்குச் சிறந்த கேமிங் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அதுவும் கிளவுட் கேமிங்கில் ஆர்வமுள்ள பயனர்களுக்கு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட JioGames Cloud ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

ஜியோவின் சொந்த சேவையாக இருக்கும் JioGames Cloud, சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ பிரீபெய்ட் திட்டங்களுடன் இலவச சலுகையாக வழங்கப்படுகிறது. ஆன்லைன் அல்லது கிளவுட் கேமிங் அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Jio-வின் இந்த ரீசார்ஜ் பிளானில் இலவச கேமிங் சந்தா.. இதோ முழு விவரம்

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அன்லிமிடெட் சலுகைகள் உடன் கிளவுட் கேமிங் சலுகை வழங்கும் ஒரு சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 545 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் கிளவுட் கேமிங் சலுகையில் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்களை (High Definition Premium Games) அணுக முடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த ஜியோ திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை, ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா, ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பேன்கோட் (FanCode) சந்தா போன்ற பல சலுகைகள் இந்த ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன. ஒருவேளை அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

Jio-வின் இந்த ரீசார்ஜ் பிளானில் இலவச கேமிங் சந்தா.. இதோ முழு விவரம்

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Jio Offers Free JioGames Cloud with This Prepaid Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X