Home
News

Jio அறிவித்த இலவச 100GB டேட்டா சலுகை! ஆனா ஒரு சின்ன டிவிஸ்ட்! இதை செஞ்சா தான் கிடைக்குமா?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஒரு நம்ப முடியாத சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகை தொடர்பான விளம்பரங்கள் இப்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது. ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகையின் படி, சில குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ், செல்லுபடியாகும் பயனர்களுக்கு ஜியோவிடமிருந்து 100ஜிபி டேட்டா முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது என்பதை அந்த விளம்பரம் பிரதிபலிக்கிறது.

புதிய HP ஸ்மார்ட் சிம் லேப்டாப் சலுகை

புதிய HP ஸ்மார்ட் சிம் லேப்டாப் சலுகை

இது ஜியோ பயனர்களையும், மக்களையும் கவரக்கூடிய ஒரு அரிய வாய்ப்பு தான் என்றாலும் கூட, இந்த 100ஜிபி இலவச டேட்டாவை பெறுவதற்கு ஒரு சின்ன டிவிஸ்ட் உங்களுக்காகக் காத்திருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, இப்போது 'HP Smart SIM Laptop' என்ற புதிய லேப்டாப் சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இப்போது உங்களுக்கு விஷயம் கொஞ்சம் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

இலவச 100ஜிபி டேட்டாவை பெற தகுதியானவர்கள் யார்?

இலவச 100ஜிபி டேட்டாவை பெற தகுதியானவர்கள் யார்?

இந்த சலுகையின் பெயரே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மையைத் தெரிவித்துவிடுகிறது. ஜியோ நிறுவனம் இந்த சலுகையை ஹெச்பி லேப்டாப்களுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. ஹெச்பியில் இருந்து ஸ்மார்ட் எல்டிஇ லேப்டாப்பை வாங்கும் பயனர்களுக்குத் தான், ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இலவச 100ஜிபி டேட்டா கிடைக்கப்போகிறது. ஆம், ஜியோ அறிவித்துள்ள 100ஜிபி இலவச டேட்டாவை பெற தகுதியானார்கள் ஒரு புது லேப்டாப் சாதனத்தை ஜியோ மூலம் வாங்க வேண்டும்.

புதிய லேப்டாப்களை வாடிக்கையாளர்கள் எப்படி வாங்குவது?

புதிய லேப்டாப்களை வாடிக்கையாளர்கள் எப்படி வாங்குவது?

இந்த புதிய லேப்டாப்களை வாடிக்கையாளர்கள் எப்படி வாங்குவது? எங்கிருந்து வாங்குவது என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். ஜியோ அறிவித்துள்ள சலுகையில் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட HP லேப்டாப்களின் குறிப்பிட்ட சில மாடல்களை தேர்வு செய்யும் போது, இந்த ஆஃபர் பொருந்தும். அப்படி புதிய HP LTE லேப்டாப்பை வாங்கும் போது, புதிய ஜியோ சிம் கார்டு ஒரு வருட சந்தாவுடன் கூடுதல் கட்டணமின்றி 365 நாட்களுக்கு கிடைக்கிறது.

ரூ. 1500 மதிப்புள்ள 100ஜிபி டேட்டா இலவசமா?

ரூ. 1500 மதிப்புள்ள 100ஜிபி டேட்டா இலவசமா?

இந்த சிம் கார்டு உடன் ரூ. 1500 மதிப்புள்ள 100ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைக்குத் தகுதியான HP லேப்டாப் மாடல்கள் HP 14ef1003tu மற்றும் HP 14ef1002tu ஆகும். விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் அல்லது ஆன்லைனில் மூலமாக இதை வாங்கலாம். reliancedigital.in அல்லது JioMart.com வழியாக ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட தகுதியான HP ஸ்மார்ட் லேப்டாப்களுடன் ஜியோ ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப் சலுகையை நீங்கள் பெற வாய்ப்புள்ளது.

100ஜிபி இலவச டேட்டா முடிந்ததும் என்னவாகும்?

100ஜிபி இலவச டேட்டா முடிந்ததும் என்னவாகும்?

தகுதியான சாதனத்தை வாங்கும்போது, ​​வாடிக்கையாளர்கள் புதிய ஜியோ சிம்மை எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் பெறலாம். இது ரூ. 1500 மதிப்பிலான 1 வருடத்திற்கு 100ஜிபி இலவச டேட்டாவை வழங்குகிறது. 100ஜிபி டேட்டா முடிந்ததும், இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆகக் குறைக்கப்படும். மீதமுள்ள செல்லுபடியாகும் காலத்திற்கு இது தொடரும். கூடுதல் வேகத்தில் அதிவேக 4G டேட்டா வேண்டும் என்று விரும்பும் பயனர்கள், MyJio அல்லது Jio.com இலிருந்து கிடைக்கும் டேட்டா பேக் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஆஃப்லைன் மூலம் இந்த சலுகையை பெறுவது எப்படி?

ஆஃப்லைன் மூலம் இந்த சலுகையை பெறுவது எப்படி?

ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் இந்த லேப்டாப்களை பர்ச்சேஸ் செய்யும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதோ. நீங்கள் ஆஃப்லைன் மூலம் இந்த சலுகையைப் பெற விரும்பினால், அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் புதிய HP ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை வாங்கவும். HP Smart LTE 100GB டேட்டா ஆஃபரில் (FRC 505) புதிய ஜியோ சிம்மை இயக்குமாறு Reliance Digital Store நிர்வாகியிடம் கேட்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் இந்த சலுகையை பெறுவது எப்படி?

ஆன்லைன் மூலம் இந்த சலுகையை பெறுவது எப்படி?

உங்கள் POI மற்றும் POA விவரங்களைக் கொடுத்து சிம்மை வெற்றிகரமாகச் செயல்படுத்தவும். 100ஜிபி இலவச டேட்டா உங்களுக்கானது. ஆன்லைன் மூலம் இந்த சலுகையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், reliancedigital.in அல்லது JioMart.com இல் புதிய HP ஸ்மார்ட் சிம் லேப்டாப்பை ஆர்டர் செய்யலாம். லேப்டாப் டெலிவரி செய்யப்பட்டவுடன், வாங்கிய ஏழு நாட்களுக்குள் இன்வாய்ஸ் பில்லுடன், அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோருக்குச் செல்லவும்.

100ஜிபி இலவச டேட்டாவுக்கு இப்படி ஒரு டிவிஸ்ட்-ஆ?

100ஜிபி இலவச டேட்டாவுக்கு இப்படி ஒரு டிவிஸ்ட்-ஆ?

HP Smart Sim Laptop 100 GB டேட்டா ஆஃபர் (FRC 505) இல் புதிய Jio இணைப்பைச் செயல்படுத்த ஸ்டோர் எக்ஸிகியூட்டிவ்விடம் கேளுங்கள். உங்கள் POI மற்றும் POA விவரங்களைக் கொடுக்க வேண்டும். HP ஸ்மார்ட் சிம் லேப்டாப்பில் சிம்மைச் சொருகி 100ஜிபி இலவச டேட்டாவை பயன்படுத்தத் துவங்கலாம். இந்த முறையைப் பின்பற்றினால், ஜியோ அறிவித்துள்ள 100ஜிபி இலவச டேட்டாவை பெற்று 1 வருடத்திற்கு வேலிடிட்டி பற்றிய எந்த கவலையும் இல்லாமல் சிறப்பாகச் செயல்படலாம்.

Best Mobiles in India

English summary
Jio Offers Free 100GB of Data For HP Smart SIM Laptop Purchase
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X