ஜியோ சிம் வைத்திருப்பவர்களுக்கு டபுள் குஷி.. எக்ஸ்ட்ரா டேட்டா, ஓடிடி, லைவ் டிவி.. 6 திட்டங்கள் இதோ!
ஜியோ நிறுவனம் இப்போதும் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா (எக்ஸ்ட்ரா டேட்டா) சலுகையை வழங்கி வருகிறது. குறிப்பாக இதுபோன்ற திட்டங்களில் தான் பலர் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது கூடுதல் டேட்டா சலுகையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.459 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 459 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் கூடுதலாக 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே இந்த ஜியோ திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் கேன்வா ப்ரோ லைட் சந்தா, ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா மற்றும் ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா ஜியோ ரூ.459 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
ஜியோ ரூ.459 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஸ்னாப்சாட்+ சந்தா (Snapchat+ subscription), ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile), ஃபேன்கோட் (FanCode) போன்றவற்றின் அணுகலும் கிடைக்கும். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.
ஜியோவின் ரூ.495 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 495 prepaid plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டம் மொத்தமாக 47ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் கிளவுட் கேமிங் சலுகையில் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்களை (High Definition Premium Games) அணுக முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.495 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை, ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா, ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பேன்கோட் (FanCode) சந்தா போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோவின் ரூ.545 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 545 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டம் மொத்தமாக 61ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் கிளவுட் கேமிங் சலுகையில் 500+ ஹை டெபனிஷன் ப்ரீமியம் கேம்களை (High Definition Premium Games) அணுக முடியும்.
அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.545 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா, 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் கிளவுட் (JioGames Cloud) சலுகை, கேன்வா ப்ரோ லைட் சந்தா, ரூ.35100 மதிப்புள்ள ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா, ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கான பேன்கோட் (FanCode) சந்தா போன்ற பல சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. இதுதவிர பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.
தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் கேன்வா ப்ரோ லைட் சந்தா, ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
மேலும் கேன்வா ப்ரோ லைட் சந்தா, ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 3599 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் 120ஜிபி போனஸ் டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் 120ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும்.
ஆகவே நீங்கள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1032.5ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான சந்தா, நானோ பானானா ஏ.ஐ, 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற சலுகைகள் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டம் மூலம் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதுவும் ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்.
தினமும் 100 எஸ்எம்எஸ், கேன்வா ப்ரோ லைட் சந்தா, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ.2200 வவுச்சர், Cinepolis திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர், ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர் போன்ற சலுகைகளும் ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
